உலகம் ஒதுக்கியவர்களுக்கு பாரத மண்ணில் கிடைத்தது ‘ராஜ’ மரியாதை!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும் 200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை ஏதாவது ஒரு நாட்டில் பாதுகாப்பாக இறக்கி விடுமாறு கப்பல் கேப்டனிடம் போலந்து ராணுவம் கூறியது. அவர்களுக்கு விடை கொடுத்த ராணுவத்தினர், ‘நாம் உயிர் பிழைத்திருந்தால் மீண்டும் சந்திப்போம்‘ என்று கூறி விடையளித்தனர். கப்பல் அவர்களை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் செசல்ஸ், ஏதென்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்றது.

எந்த நாடும் அவர்களை அனுமதிக்கவில்லை. கப்பல்  நீண்ட பயணத்திற்குப் பிறகு அப்படியே ஈரான் வந்தது. அங்கேயும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கடைசியாக பம்பா வந்தது. அங்கும் பிரிட்டிஷார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட ஜாம்நகர் மஹாராஜா ‘ஜாம் ஸாஹேப் திக்விஜ சிங்ஜி ரஞ்ஜித்சிங்ஜி’ வருத்தப்பட்டு அந்தக் கப்பலை தனது ஆட்சிக்குட்பட்ட ஒரு துறைமுகத்தில் நிறுத்த அனுமதியளித்தார். அது மட்டுமல்லாமல் அவர்களை ஜாம்நகரில் தங்கவைத்தார். பாலச்சிரி என்ற ஊரில் இருந்த ராணுவப் பள்ளியில் இலவச கல்விக்கும் ஏற்பாடு செதார். அவர்களை அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையானவற்றை செது கொடுத்தார். மஹாராஜாவை அவர்கள் அன்புடன் ‘பாபு’ (அப்பா) என்றழைத்தனர். அவர்கள் உலகப் போர் முடியும்வரை சுமார் ஒன்பது வருடங்கள் அவருடைய பராமரிப்பில் இருந்தார்கள். போர் முடிந்தவுடன் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர். அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது.போலந்து தலைநகர் வார்ஸாவின் பல தெருக்களுக்கு ‘மஹராஜா ஜாம் திக் விஜ சிங்’ பெயரை வைத்து மகிழ்ந்தனர். பல நலத்திட்டங்களுக்கும் அவரது பெயரை வைத்தனர்.

இன்றும் அந்த அகதிகளின் வாரிசுகள் வருடத்திற்கு ஒருமுறை ஜாம்நகருக்கு வருகை தந்து அவர்களின் முன்னோர்களை நினைவுகூர்ந்து செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அங்குள்ள பத்திரிகைகள் மஹாராஜாவைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதன் மூலம் ஹிந்து கலாச்சாரம் விருந்தோம்பல், தர்மசிந்தனை, பொறுமையணர்வு ஆகிய பண்புகள் தேசம் அடிமைப்பட்டிருந்த காலத்திலும் ஒளிவீசித் திகழ்ந்ததை உலகிற்கு உணர்த்தியிருக்கிறோம்.