தண்டனைக்குரிய குற்றம் செய்த நபரை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டிய காவல்துறையின் புலனாய்வு பிரிவினர் சுதந்திரமாக நடமாட விடுவார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருக்கும். போதிய தடயம் கிடைக்கும் வரை இந்த நாடகம் நடக்கும். பிறகு மேற்படி நபரை கூண்டில் ஏற்றி சிறைக்கு அனுப்பி கம்பி எண்ண வைப்பார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தி.க அமைப்பினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் “டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற வியாதிகளை பரப்பும் கொசுக்களை, கிருமிகளை ஒழிப்பது போல சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று பேசினார். அது தண்டனைக்குரிய குற்றம் என்பதை சட்டம் தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அந்த நபர் கூண்டில் ஏற்றப்படாமல் இருந்து வருகிறார்.
அந்த ஆட்சி முடிந்து புதிய தமிழக அரசு அமைந்த பிறகு மே 12 அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உரையாற்றி, மக்களை பிரிக்கும் சனாதனத்தை நிச்சயம் ஒழிக்க வேண்டும் என்று முடித்தார் அதே நபர். சபைக்குள் அதே குற்றம் இழைத்தார். பழைய குற்றம் குறித்து இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அதிலிருந்து தப்பிக்க அங்கே சபை சலுகை ஏதும் கிடையாது.
சனாதனம் பற்றிய இந்த நபரின் வக்கிரப் பேச்சால் மனம் புண்பட்டு கொதித்துப் போய் இருப்பது ஹிந்து சமுதாயம். கண்ணெதிரே சர்வ வல்லமை உள்ள அரசாக தம்பட்டமடித்துக் கொண்ட திமுக தர்பாரை முடக்கி மூலையில் வீசிய விழிப்புள்ள சமுதாயம் இது. சபை வளாக பாதுகாப்புக்குள் இருந்தபடி கந்தலான நேரேட்டிவ் செட் பண்ணி, அதனால் மத உணர்வு புண்பட்ட கோடிக்கணக்கான மக்களை எதிர்ப்புக் குரல் கொடுக்க வீதிக்கு இழுத்து விட்டு அந்த நபர் கொக்கரிக்க நினைத்தால் நினைப்பில் மண் விழும். இது நிஜம்.
kfnd, c‹ rk®¤J!
உலகையே திணற வைக்கிற எரிபொருள் தட்டுப்பாடு பாரதத்தை பாதிக்காமல் தவிர்ப்பதற்காக பாரத அரசு பல சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஜோசப் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழக அரசு இதை மனதில் கொண்டு உரிய சிக்கன நடவடிக்கைகளை தயங்காமல், கூச்சமில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இதை இந்த அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். புதிய மாநில அரசு தேசிய சூழலுக்கு இசைவாக செயல்படுகிறதா என்று தெரிய இது ஒரு அக்கினி பரீட்சை. மகனே, உன் சமர்த்து!