உண்மை நிலையை எடுத்து சொன்னால் நடுநிலையை தவறியதா?

“தினமணி’யின் 4.4.2020 நாளிட்ட , “மன்னிக்கக்கூடாத குற்றம்” என்ற தலையங்கத்தை மறுத்தும் கண்டித்தும்
ஹாஜாகனி, நிஜாமுதீன் ஆகியோர் எழுதியனவற்றைப் படித்தேன்.. (6.4.2020). தலையங்கத்தின் ஒவ்வொருவரியும்
சரியான தகவல்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கிறது, ஹாஜாவின் ஆட்சேபணைக்குரிய
கருத்துகள் தாங்கிய கட்டுரைகளை அடிக்கடி தினமணி வெளீட்டுவரும்போது தினமணியின் நடுநிலைமையை
விமர்சிப்பது சரியல்ல. தீவிரவாதத்திற்கு முஸ்லீம் சமுதாயத்தில் ஆதரவு கிடையாது என்கிறார் ஹாஜா.
அப்படியென்றால், தீவிரவாதிகளெல்லாம் ஏன் முஸ்லீம்களாக இருக்கிறார்கள்?. காவல்துறை
சொன்னவுடன் வெளியேற ஒப்புக்கொண்டிருந்தால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மசூதிக்கு
வரவேண்டிய அவசியம் என்ன? அமெரிக்க அதிபர் வருகை முன்னமே நிகழ்ந்தது. அதை இழுப்பது சரியல்ல.

மசூதியில் நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அயோத்தியைக் காட்டுவது நேர்மையான வாதமன்று. அயோத்தி விஷயம் வேறு விஷயம்…தமிழ்நாட்டில் குறைவாக இருந்த பாதிப்பாளிகள் அதிகமானதற்கு மசூதியாளர்களே காரணம் என்பது கண்கூடு.. பரிசோதனைக்கு ஒத்துழைப்புத் தர மறுத்தவர்ளும் மருத்துவர்களை வசைபாடித் தாக்கியவர்களும் அவர்க்ளே.. தில்லியிலேயே இருந்து தீர்த்துக்கொள்ளாமல் நாடுபூராவும் பரப்பியதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? “அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டாம்” என்ற அறிவுரை மசூதியிலிருந்து வந்தது நியாயமா? இவ்வுண்மைகளைக் கண்டுகொள்ளாமல், இவர்கள் ஏதோ ஒரு அரசியல் உச்சி மாநாட்டிற்குச் சென்று புகழ் ஈட்டியவர்கள்போல். “தில்லி மாநாடு” என்று ஊடகங்கள் குறிப்பிட்டபோது மகிழ்ந்தவர்கள் ,இப்போது பதறுவது ஏன்?.. தில்லி மசூதியின் நிகழ்வுகளைத் தமிழ்நாட்டில் ஒன்றிரெண்டு சான்றோர்களைத்தவிர மற்ற முஸ்லீம் தலைவர்கள் கண்டிக்காதது குற்றமே. ஊடகங்களெல்லாம் இப்பெருந்தவறைக் கண்டிக்காமல் நழுவிய நேரத்தில், ‘தினமணியின் தலையங்கம் போற்றுதற்குரியதே. அதை ஏற்க முடியாதவர்கள் அறம் பிறழ்ந்தவர்களே.

நிஸாமுதீன், தப்ளீக் ஜமாத் தீவிர வாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது என்ற தலையங்கத்தின் கூற்று கண்டு சீறுகிறார். சரியான ஆய்வுகளின் அடிப்படையில்தான் அவ்வாறு கூறியுள்ளது தலையங்கம். 7.4.2020 தினமணியின் ஏழாம் பக்கத்தில் வெளியாகியுள்ள, “தப்லீக் ஜமாத்துக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?” என்ற கட்டுரை உரிய விளக்கம் சொல்லும். 2.4.2020 ‘தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்” நாளேட்டில் குருமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தால்திடுக்கிடும் செய்திகள் கிடைக்கும்..சுற்றுலா விசாவில் வந்தவர்கள் மத போதனை மாநாட்டில் பங்கெடுத்தது உள்ளிட்ட பல தவறுகளை முஸ்லீம் தலைவர்கள் கண்டிக்காதது, அவர்கள் முஸ்லீம் சமுதாயத்திற்கு இழைத்த அநீதி. மற்றவர்களையோ தினமணியையோ குறைகாண்பதில் பயனில்லை..

என். ஆர். ஸத்யமூர்த்தி.