இளைஞர்கள் ராணுவத்தில் சேர இவர் தருவது ஊக்கம்

“ராணுவம் ஒரு நாட்டின் இரும்புக்கோட்டை என்று சொல்வார்கள். இதில் குறிப்பாக இந்திய ராணுவம் உலகிலேயே தலைசிறந்தது. இதில் பணியாற்றுவதற்கு ஒவ்வொரு இந்தியனும் மாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்கிறார். பாரதத்தின் தென்துருவ ஆய்வு தளமான தக்ஷிண் கங்கோத்ரியின் தலைவராக அண்டார்டிகா என்ற பனி உலகத்தில் ஒன்றரை ஆண்டுக்காலம் இருந்து தாய்நாடு திரும்பிய இவர் பிறகு சொந்த கிராமமான சன்னாநல்லூரில் (திருவாரூர் மாவட்டம்) ‘அகத்தூண்டுதல் பூங்கா’ என்ற ஒரு அமைப்பை சொந்த நிலத்தில் அமைத்துள்ளார். பல லட்ச ரூபாய் இதற்காக ஓய்வூதியத்திலிருந்து செலவிட்டுள்ளார்.

இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்திட ஊக்கமளிக்க இங்கு பல நிகழ்ச்சிகள், பயிற்சிகள் நடத்துகிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்தும் வேறு பல கல்வி நிறுவனங்களிலிருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் அவ்வப்பொழுது அகத்தூண்டுதல் பூங்கா நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள் என்கிறார் இவர்.