இலங்கை செல்லும் அண்ணாமலை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் சார்பில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மே தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு நடக்கும் மே தின மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று, அண்ணாமலை இலங்கை சென்றார். ”பிரதமர் மோடியின் பிரதிநிதியாக செல்கிறேன்; இந்திய இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் என் பயணம் இருக்கும்” என, அண்ணாமலை தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருகும் இலங்கைக்கு பாரதம் ஒரு பெரிய சகோதரனாக இருந்து பல உதவிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமல்ல, ஏற்கனவே, இலங்கை மக்களுக்கு தேவையான பல உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. அங்கிருக்கும் மக்களின் மீள் வாழ்க்கைக்காக 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் நன்றி சொல்லும் விதமாக, அங்கிருக்கும் பாரத வம்சாவளி மக்கள், தங்களின் தொழிலாளர் காங்கிரஸ் வாயிலாக, மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வரும்படி அண்ணாமலையை அழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.