இன்றைய தேதியில் அன்று – டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம்

ராமேஸ்வரத்தில், ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா தம்பதிக்கு மகனாக, 1931 அக்., 15ல் பிறந்தார். ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருச்சி துாய வளன் கல்லுாரியில், இயற்பியலில் பட்டம் பெற்றார். 1955ல், சென்னை, எம்.ஐ.டி.,யில், விண்வெளி பொறியியல் படிப்பில், முதுகலை பட்டம் பெற்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், பொறியாளராக பணியாற்றினார். அக்னி ஏவுகணையை உருவாக்கியதால், ‘ஏவுகணை நாயகன்’ என, அழைக்கப்பட்டார். 1998ல் ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் நடந்த, – இரண்டாவது அணு ஆயுத பரிசோதனையில், முக்கிய பங்காற்றினார்.

2002, ஜூலை 25ல், நாட்டின், 11வது ஜனாதிபதியானார். நாட்டின் உயரிய, பாரத ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். ‘இந்தியா – 2020’ என்ற புத்தகத்தில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் திட்டங்களை, முன்மொழிந்து உள்ளார். 2015, ஜூலை, 27ல், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் காலமானார்.

அவர் பிறந்த தினம் இன்று.