இந்த கும்பலை பிரதமர் சந்திக்காதது சரிதான்

டெல்லியில் அய்யாக்கண்ணு நடத்திய போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இவர்களின் போராட்டத்தை ஊதிப் பெரிதாக்கியது தொலைக்காட்சிகளின் கைவேலை. பிரதமரை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

பிரதமரை ஒரு குழு சந்திக்க வேண்டுமானால் உளவுத்துறை அவர்களைப் பற்றிய விபரங்களைத் தேடி, அவர்களின் பின்னணியை ஆராய்ந்து கொடுக்கும் தகவலைப் பொறுத்தே சந்திக்க அனுமதி கொடுப்பார்கள். இது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் உள்ள ஏற்பாடாகும்.

அந்த கும்பலில் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் தொடர்பும், அபிமானமும் கொண்ட ஷேக் ஹுசேன் விவசாயிகள் போர்வையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று போராடுபவர்களிடம் தொடர்பு கொண்டவர். இந்திய ராணுவம் காஷ்மீரில் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது என்று பொய்யான பிரச்சாரத்தை இணையதளத்தில் பரப்பி வந்தவர். நாடாளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவுக்கு வக்காலத்து வாங்கிய பேர்வழி.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்த பிறகு ஒரு நாட்டின் பிரதமரை சந்திக்க இவர்களை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த பின்னணி தெரியாத தலைவர்கள் பாவப்பட்ட விவசாயிகளைப் பார்க்க மோடி ஏன் தயங்குகிறார் என்று கண்டனக் குரல் எழுப்பி வந்ததுதான் கூத்து. பிரதமரை சந்தித்து மனு கொடுப்பதுதான் இவர்களது இலக்காக இருந்தால் பிரதமர் நிச்சயம் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருப்பார். நரேந்திரமோடியின் முகமூடி அணிந்துகொண்டு அவரை எவ்வளவு கேவலப் படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்தினார்கள். நரேந்திர மோடி எதிர்ப்புப் பிரச்சாரமாகவே இந்தப் போராட்டத்தை உருவாக்கினார்கள்.

தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது துவக்கிய இந்த டெல்லி போராட்டம் அவர் கைதானபோது நிறைவு பெற்றது எங்கேயோ இடிக்கிறது!

ஏன்? வேளா வேளைக்கு பிரியாணி சாப்பாடும், மினரல் வாட்டரும் ஏற்பாடு செய்தவர்களின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருந்தார்கள்.

அப்பாவி விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்ட அய்யாக்கண்ணு ஏன் ஓடவில்லை என்று ஹெச் ராஜா கேட்டதும், அய்யாக்கண்ணு ஒரு மோசடிப் பேர்வழி என்று ராஜா சொன்னதும் உண்மைதான் என்று சில நாட்களில் தெரியவரும்.