இந்திய முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை – வக்பு வாரிய தலைவர்

 ‘தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடுவது குறித்து, இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை’ என உ.பி., மாநில ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டுக்குள் ஊடுருவி, அச்சுறுத்தல் விளைவிப்பவர்களை அடையாளம் காணவே, தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை.

இந்த ஊடுருவல்காரர்கள், திரிணமுல் காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஓட்டு வங்கியாக உள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையை, காங்., அரசு வினியோகித்தது. இந்த குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டால், அவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.