இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்தது

சுஷ்மா ஸ்வராஜ் பற்றி பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார் 

தனது வாழ்க்கையை பொது சேவைக்காகவும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அர்ப்பணித்த தலைவரின் மறைவுக்கு பாரதம் வருந்துகிறது. சுஷ்மா ஸ்வராஜ் அன்பு உள்ளம் கொண்டவர் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தார் சுஷ்மா சுவராஜ் ஒரு மிகச்சிறந்த சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். பா.ஜ.கவில் போற்றப்பட்டு மதிக்கப்பட்டார். பாஜக-வின் கொள்கை, சித்தாந்தம் நலன்களில் சமரசம் செய்ததே இல்லை. கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தார். சுஷ்மாஜி ஒரு சிறந்த நிர்வாகி அவர் கையாண்ட ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். பல்வேறு நாடுகளுடனான பாரதத்தின் உறவை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். சக அமைச்சராக நாங்கள் அவருடைய இரக்கமுள்ள குணத்தை பார்த்தோம். உலகின் எந்தப் பகுதியிலும் துன்பத்தில் இருந்த பாரத வாசிகளுக்கு உதவினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சுஷ்மாஜி உழைத்த விதத்தை என்னால் மறக்க முடியாது. அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட அவர் தன் வேலையை செய்வதில் உறுதியாக இருந்தார். அவருடைய அமைச்சகம் தொடர்பான எல்லா விஷயத்திலும் உடம்பு சரியில்லாத போதும் தொடர்பிலேயே இருந்தார். அவருடைய அர்ப்பணிப்பு இணையற்றது. சுஷ்மாஜியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவர் பாரதத்திற்கு ஆற்றிய செயல்கள் மூலம் அனைவராலும் அன்பாக நினைவுகூரப்படுவார். இந்த சோகமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர். ஐக்கிய முற்போக்குகூட்டணியின் ஆட்சியில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை திறம்பட கையாண்டவர். பாரதிய ஜனதாக்கட்சியின் வாஜ்பாய் தலைமையிலான முதல் ஆட்சியின் போது  ஆட்சியின் போது செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர். மோடி தலைமையிலான சென்ற ஆட்சியின்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து திறம்பட செயலாற்றியவர். சிறுநீரக பாதிப்பினால் மாற்று சிறுநீரக ஆப்ரேசன் செய்துகொண்ட நிலையில் அரசியலில் இரு ந்து ஒதுங்கி றிருந்தார். அவரது வீரத்துக்கு சான்று வாஜ்பாய் ஆட்சி தேர்தலில் தோற்று அவியல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் பிரதமர்  வேட்பாளராக சோனியா அறிவிக்கப்பட்டால் தேசத்தின் நிலை என்னவாகும் என்றும்  அப்படி நடந்து விட்டால் தனது  தலையை மொட்டை அடித்து தரையில் தூங்கி சந்நியாசினியாக வாழ்வேன் என்று தைரியமாக அறிவிக்கை செய்த துணிச்சலுக்கு சொந்தக்காரர். அதுமட்டுமல்ல அப்படி சோனியா  பிரதமராக பதவி ஏற்றால் அது 100 கோடி இந்தியருக்கு அவமானம் என்று ஆவேசமாக புலியென பயந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். தனது கணவரின் பெயரான ஸ்வராஜோடு இனைத்ததாலோ என்னவோ தன்மானம் மற்றும்  ஸ்வராஜ்யத்தின் மீது அப்படியொரு பக்தி வாழ்க அவரில் புகழ் அவரது ஆன்மா சாந்தியடைந்து  இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.

ஓம் சாந்தி !.