இதிகாச ஹரித்வார் சுவர்கள்

ஹரித்வாரை இந்திய இதிகாசங்கள், கலாச்சார மையமாக மாற்ற அம்மாநில அரசு னடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஹரித்வார்-ரூர்க்கி மேம்பாட்டு ஆணையத்தால் பெயிண்ட் மை சிட்டி என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. ஹிந்து புராணங்களையும் உத்தரகண்ட் கலாச்சாரத்தையும் சித்தரிக்கும் வகையில் சுவர்கள், பாலங்கள், அரசு கட்டிடங்கள், பிற இடங்கள் முழுவதும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஹரித்வாரில் நடைபெறுகின்ற மகா கும்ப மேளா ஜனவரி 14, மகர சங்கராந்தியில் தொடங்கியது ஏப்ரல் வரை தொடரும். இது வழக்கமான மூன்றரை மாதங்களுக்கு பதிலாக 48 நாட்கள் நடைபெறுகிறது.