ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலித்களுக்கு தெம்பு

பாரதிய பௌத்தர்கள் சங்கம், சங்க பரிவார் அமைப்புகளில் ஒன்று. தலித் மக்கள் ஹிந்துக்களே என்பதை புரிய வைக்கும் வகையிலும் புத்தரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையிலும் பாரதிய பௌத்தர்கள் அமைப்பிdhalit-rssலுள்ள சகோதரர்கள்,

அக்டோபர் 14 அன்று டெல்லியிலிருந்து பாத யாத்திரையை துவங்குகின்றனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் வழியாக மே 26 அன்று குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் பாத யாத்திரை நிறைவுறும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குஜராத் மாநிலம் உணா மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு ‘கோ ரக்ஷக்’ என்ற பெயரில் நடமாடும் சில விஷமிகளால் தாக்குதலுக்கு உள்ளான  4 ஹரிஜன் சகோதர்களும் கலந்து கொள்கினறனர். தவறு செய்தவர்கள் சங்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள் என்று தெரிந்தும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக, ஆர்.எஸ்.எஸ் மீது பழி போட்டன. தலித் மக்களை எப்படியாவது பிரித்து அவர்களை மதம் மாற்றிவிட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்டி போடுகின்றனர்.

ஆனால் உணாவில் தாக்கப்பட்ட தலித் சகோதரர்கள் உண்மை தெரிந்தவர்கள். எனவேதான், பலவேறு அழுத்தங்களையும் மீறி சங்கத்துடன் தோளோடு தோள் நிற்கின்றனர்.

– சிவராமகிருஷ்ணன், சிட்லப்பாக்கம்