ஆன்மிகம் – இளமையிலேயே பண்படுக

சாது ஒருவர் கிராமத்தில் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். கிராம மக்கள் சாதுவின் சொற்பொழிவுகளை கேட்பதற்காக ஆசிரமத்துக்கு செல்வார்கள். ஷாமு அங்கு செல்ல விரும்பமாட்டான். ஆனால் அவனது நெருங்கிய நண்பன் ஷாமுவை கட்டாயப்படுத்தி ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்வான். சாது புராணங்களில் இருக்கும் கதைகளை சொன்னார். தேவலோகத்தில் இந்திரனை பற்றி சொன்னார். அதில் இந்திரன் சோமபானம் அருந்திவிட்டு நடனமாடுவார் என்றும் சொன்னார். இதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்ட ஷாமு, மனைவியிடம் இந்திரரே சோமபானம் அருந்துவார். அதனால் நான் அருந்துனா என்ன தப்பு என்று சொன்னான். மேலும் சாது ஒவ்வொரு இடத்திலும் கடவுள் இருக்கிறார் நீயும் கடவுளே என்றார். இதை தவறாக புரிந்துகொண்ட ஷாமு தினமும் வேலை முடித்து மதுகடைக்குசென்று குடித்துவிட்டு தான் வீட்டுக்குச் செல்வான்.

ஒருவாரம் இவனுடைய நடவடிக்கையை பார்த்து மனம் நொந்துபோன அவன் மனைவி சாதுவிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டால். சாது இதற்கு தீர்வை சொல்லி அனுப்பினார். அவனது மனைவி அடுத்தநாள் முதல் தலைநிறைய பூ வைத்துக்கொண்டு தன்னை அழகுப்படுத்திக்கொண்டால். ஷாமுவிடம் அலங்கரிப்பதற்காக நகைகள், புதிய ஆடை வாங்க ஆசையிருப்பதாக தெரிவித்தால். மேலும் அவள் கடவுளுடைய மனைவி என்பதால் வேலைக்கு சொல்லபோவதில்லை என்றும் கூறினால். இதைக்கேட்ட ஷாமு ஆடிப்போய்விட்டான். இரண்டு நாள் வீட்டுக்கே வரவில்லை வங்கியில் எடுத்த தொகையை பார்த்து வருத்தப்பட்டு இந்த நிலை தொடரக்கூடாது என்று எண்ணினான். மனைவியிடம் சொன்னான் நீ கடவுளின் மனைவி இல்லை சாதாரண கிராம பெண்மணி. அதனால் திரும்ப வேலைக்கு செல்லும்படி கூறினான். ஷாமுவிடம் அவனது மனைவி சொன்னால் நீங்கள் இந்திரன் என்றால் நான் சாச்சிதானே. புராணத்தில் சாச்சி என்றாவது வேலைக்கு போயிருக்கிறாரா, அழகாக, உடை அணிந்து தலை நிறைய பூவைத்துகொண்டுதானே இருப்பார் என்றால். இதனை உணர்ந்த ஷாமு இனிமேலும் தன்னை இந்திரன் என்று சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தான்.

ஷாமு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பினான். இனிமேல் தான் சாதுவின் சொற்பொழிவுகளை கேட்க வரமாட்டேன் என்று நண்பனிடம் தெரிவித்தான். அவரிடம் இருந்து எந்த கருத்துக்களையும் கடைபிடிக்கப்போவதில்லை என்றான். வழக்கம்போல சாது தன் சொற்பொழிவின் போது அன்று சொன்னார். யாரையும் ஆன்மிகத்திற்கு கட்டாயப்படுத்தி கொண்டு வராதீர்கள், அதற்கான நேரம் வரும்போது அவர்களே கடவுளை தேடிச்செல்வார்கள். மீறி அவர்களை வற்புருத்தினால் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.

குறிப்பு: ஆம்மிகத்தை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே உணர்த்த வேண்டும், மாறாக திடீரென்று ஒருவரை பெரியவயதில் போது கட்டாயப்படுத்தினால் அது தவறான தாக்கத்தை ஏற்படுத்தும். சோமபானம் என்பது முளிகை தண்ணீர்தான்.