ஆசியா கோயில்கள் மீட்பு

வி யட்னாமின் பழமையான சம்பா கோயில்கள் முதல் கம்போடியாவின் அங்கோர்வாட் வளாகம் வரை, யாழ்ப்பாணம் முதல் வங்கதேசம் வரை இந்த கோயில் சீரமைப்பு முயற்சிகள், மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க, பல திட்டங்களாக புத்துயிர் பெற்று வருகிறது.
இதன் முக்கிய நோக்கம், அழிந்து வரும் பாரம்பரிய கோயில் தளங்களை பாதுகாத்தல். இந்த முயற்சிகளில் பல, பாரத தொல்லியல் ஆய்வுத்துறையால் உள்ளாட்சி அமைப்புகள், யுனெஸ்கோ மற்றும் பாதுகாப்பு நிபுணர்களுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
மை சன் சரணாலயம், வியட்நாம்
பாரதத்தின் மிக முக்கியமான வெளிநாட்டு பாதுகாப்பு திட்டங்களில் ஒன்று வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் சரணாலயத்தை மீட்டெடுத்ததாகும். சைவ வழிபாட்டுத் தளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த சிவபெருமானின் ஆலயமான கோயில் வளாகத்தின் கட்டமைப்பு, ஒருமைப்பாடு மற்றும் வரலாற்று நம்பகத்தன்மையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது.
ராம்னா காளி கோயில், வங்காளதேசம்
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் கொடூரமான அடக்கு முறையை தொடங்கிய போது ‘ஆபரேஷன் சர்ச் லைட்’ நடவடிக்கையின் கீழ், இந்த வரலாற்று சிறப்புமிக்க ராம்னா காளி கோயில் அழிக்கப்பட்டது. பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசத்திற்கு வருகை தந்த போது, புனரமைக்கப்பட்டு திறந்த வைக்கப்பட்டது. தெற்காசியாவின் இருண்ட அத்தியாயங்களில் இழந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில், பாரதத்தின் அர்ப்பணிப்பை இந்த திட்டம் வெளிப்படுத்தியது.
ஜாய் காளி மாதா கோயில், வங்கதேசம்
திக பாட்டியா அரச குடும்பத்தை நிறுவிய தயாராம் ராயால், பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், ஒரு முக்கியமான மத அடையாளமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக சிதைந்து கிடந்ததைத் தொடர்ந்து, அதன் புனரமைப்புக்காக பாரதம் நிதி உதவி வழங்கியது. கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஹிந்து வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும், 2020ல் இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டது.
அங்கோர் வாட் மற்றும் பிற கோயில் வளாகங்கள், கம்போடியா
பல ஆண்டுகளாக கம்போடியாவின் பிரம்மாண்டமான அங்கோர் வாட் சின்னங்களை பாதுகாப்பதில், பாரதம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. பாரத தொல்லியல் ஆய்வுத் துறையின் மூலம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல பாரம்பரிய தளங்களில் முதலில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாக கட்டப்பட்டு, பின்னர் பௌத்த நினைவு சின்னமாக மாறிய அங்கோர்வாட், உலகின் மிகப்பெரிய மதக் கட்டமைப்பாக திகழ்கிறது.
அறிவியல் பாதுகாப்பு முறைகளையும், பாரம்பரிய மீட்டமைப்பு நுட்பங்களையும் பயன்படுத்தி, இந்த குழுக்கள் வருங்கால சந்ததியினருக்கு நினைவுச் சின்னங்களின் வரலாற்றுத் தன்மையை பேணிக் காக்கவும், பல நூற்றாண்டுகளாக நீடித்த பண்பாட்டு பரிமாற்றங்களையும் வழிப்படுத்துகிறது.
வாட் பூ கோயில், லாவோஸ்
பாரதத்தின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றிய மற்றொரு யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமாகும். 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை, முதற்கட்ட கட்டமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 2018ல், கட்டமைப்புப் பாதுகாப்பு சிற்பங்களை பாதுகாத்தல் மற்றும் தொல்பொருள் சிற்பங்களை ஆவணப்படுத்தல் என தொடங்கியது.
ஸ்ரீநாத் ஜி கோயில், பஹ்ரைன்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொல்லியல் திட்டங்களைப் போல் அல்லாமல், பக்ரைனில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோயில், பாரதத்தின் ஒரு உயிருள்ள வழிபாட்டுத் தலமாக பாதுகாக்கப்படுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 4.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புனரமைப்பு திட்டத்தை அறிவித்தார்.
கோயிலின் தற்போது உள்ள கட்டமைப்புகளை புதுப்பித்தல், சமூக வசதிகளை விரிவுபடுத்துதல், நவீன உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலை தன்மையை கவனமாக பாதுகாத்தல். இந்த முயற்சி பஹ்ரைனில் நீண்ட கால மத சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு பாரம்பரியத்தை அங்கீகரிப்பதோடு, புலம் பெயர்ந்த பாரதத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
திருக்கேதீஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம்
2015 ஆம் ஆண்டில், புனரமைப்புக்காக இலங்கை பணத்தில் 326 மில்லியன் ரூபாயை நிதி உதவியாக பாரதம் அளித்தது. யாழ்ப்பாணத்தின் ஐந்து பழமையான சிவன் கோயில்களான பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. இத்திருக்கோயில் யாழ்பாணத்துடனான பாரதத்தின் கலாச்சார கூட்டாண்மையையும் இந்த திட்டம் வலுப்படுத்தியது.
-கட்டுரையாளர்: செய்தியாளர்,
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்