அஸ்ஸாமிலும்வெற்றி பெற்ற பாஜக கூட்டணி

நாடு முழுவதிலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பா ஜ க கூட்டணி நல்ல வெற்றியை சந்தித்து வருகிறது. சமிபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியைபின்னுக்கு தள்ளி வட்டார பஞ்சாயத்து மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. முன்னதாக ஜம்முகாஷ்மீர் லடாக் யூனியன் பிரதேச மலைமேம்பட்டு கவுன்சில் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு வெற்றியை வசமாக்கியது.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் போடோலேண்ட் வளர்ச்சி கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் முந்தய ஆளும்கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி தோல்வியுற்றது. முன்னதாக அஸ்ஸாமின்ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த போடோலாந்து மக்கள் முன்னணி தேசிய குடியுரிமை பதிவேடு , மக்கள்தொகை கணக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக வுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களுக்கான தேர்தலில் வெறும் 17 இடங்களியே வெற்றி பெற முடிந்தது. மாறாக ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி 12 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 9 இடங்களையும் காங்கிரஸ் கட்சி ஓரு இடத்திலுயும்  காண சுரக்ஷா கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது..

இந்த தேர்தல் முடிவில் ஒரு நல்ல காரணியாக பங்களா தேசிகளின் முஸ்லிம் பெரும்பான்மை  கட்சியான எஐடியுஎப்  முந்தய கவுன்சிலில் பெற்றிருந்த நான்கு இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. முன்னதாக போடோலாந்து மக்கள் முன்னணியும் பாரதீய ஜனதா கட்சியும்  தேர்தலில் தனியாக போட்டியிட்டதுடன் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசிக்கொண்டனர் . இந்நிலையில் தேர்தலின் முடிவுகள் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது. .தேர்தலுக்கு பிந்தைய  கூட்டணியாக  ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி, பாரதியஜனதா கட்சியும் கன சுரக்ஷா பார்ட்டியும் இணைந்து போடோலாந்து வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியை முதல்வர் சர்பாவனந்த சோனவால் மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தேசிய பொதுசெயலர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது

 இந்த தேர்தல்வெற்றி இன்னும் ஆறு மாதங்களில் வரவுள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்கான  முன்னோட்டமாக  பார்க்கப் படுகிறது. இந்த மலை மேம்பாட்டுகவுன்சில் தேர்தல் நடைபெற்ற பிராந்தியத்தில் கோக்ராஜர்,சிராங் ,பக்ஸா,உடல்குறிஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளது.இந்த மாவட்டங்கள் ஆதிவாசிகள்  பங்களாதேசி முஸ்லிம்கள் இதரஅஸ்ஸாமிகள் நிரந்த பகுதியாகும். இந்த பகுதியில் மொத்தமுள்ள 124 சட்டமன்ற இடங்களில் 14 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மார்ச் 20 ம் தேதியுடன் முடிவடைந்த இந்த மலைமேம்பாட்டு கவுன்சிலின் அதிகாரத்தை தேர்தல் தள்ளிவைப்பு காரணமாக கவர்னர் வசமாகியது. கொரோன தொற்று காரணமாக வேட்புமனு தாக்கல்  செய்யப்பட்டு தேர்தல் நடைபெறவேண்டிய சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது. .