குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்;
கடமைகளே உரிமைகளுக்கு அடிப்படையானவை. நமது கடமைகளை முறையாக நிறைவேற்றினால், உரிமைகள் உரிய முறையில் கிடைக்கும். ஆனால், கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் கோரினால், அந்த உரிமைகள் எப்போதும் நமக்குக் கிடைக்காது’ என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளாா். நாட்டின் குடிமக்களுக்கு பல்வேறு உரிமைகளை நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. அதே வேளையில், அவா்களது கடமையை ஆற்றுவதிலிருந்தும் தவறக்கூடாது என்பதை நாடாளுமன்றம் தொடா்ந்து நினைவூட்டி வருகிறது.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு;
வளா்ச்சி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரசு மட்டுமே முழு பொறுப்பையும் ஏற்க முடியாது. குடிமக்களும் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக அரசுடன் மக்களும் சமமான பங்களிப்பைத் தர வேண்டும்.
‘நாடு என்பது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். முரண்பாடு இருந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும். மத நம்பிக்கைகளை நாட்டுக்கு அப்பாற்பட்டு மக்கள் வைப்பாா்களா அல்லது நாட்டை மத நம்பிக்கைகளுக்குள் அடக்கிவிடுவாா்களா என்று தெரியவில்லை. ஆனால், நாட்டை மத நம்பிக்கைகளுக்குள்பட்டு வைத்திருந்தால் நாடு அடைந்த சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடும். ஒருவேளை சுதந்திரம் பறிபோனாலும் போகலாம்’ என்று சட்டமேதை அம்பேத்கா் தனது அச்சத்தை பதிவு செய்திருக்கிறாா்.
பிரதமர் நரேந்திர மோடி;
இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பலதரப்பட்ட மக்களின் நலன் கருதி வரையறுத்துள்ள இந்த சட்டம், இந்தியர்களின் பெருமையை நிலைநாட்டும் ஒன்று என்றும், நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது. இந்திய குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இரண்டையும் எடுத்துக்காட்டும் இந்த சட்டம் தான் நமக்கான புனித புத்தகம். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்றும், இத்தகைய உன்னதம் வாய்ந்த புத்தகத்தை இந்தியர்கள் ஒருபோதும் தலை குனிய செய்ததே இல்லை என்று கூறி அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
நமது உரிமைகளையும் கடமைகளையும் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கும் இதன் மரியாதையை காக்க வேண்டியதும், மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்று கூறினார்.