அயோத்தி ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறுகையில், ”அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்ட நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் கோயிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் ராமர் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூலை வைக்கப் போகிறோம். கோவில் கட்டுமானத்துக்காக பல்வேறு புனிதமான இடங்களில் இருந்தும் மண் கொண்டுவரப்படும். மேலும் ராமர் தன் வாழ்க்கை பயணத்தின் போது சந்தித்த நதிகளில் இருந்தும் புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார்.