அயோத்தியில் ஆதிசங்கரர் கோயில்

ஆதிசங்கரர் கி.மு 508ல் தோன்றி அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டியவர். அவர் பாரதம் முழுவதும் பயணித்து அத்வைத கருத்துகளை பரப்பினார். அக்காலத்தில் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் அளித்த மகான். அவர் பாரதத்தில் ஸ்தாபித்த நான்கு பீடங்களில் முதன்மையானது, கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடம். அதன் பீடாதிபதியான ஜகத்குரு பாரதி தீர்த்த மஹா சுவாமிகள், அயோத்தியில் ராமர் கோயில் அமையும் இடத்தில் ஆதிசங்கரருக்கும் கோயில் அமைக்க வேண்டும், அவரது அத்வைத கொள்கைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும், இதற்காக ஆராய்ச்சி மையம் ஒன்றை அயோத்தியில் நிறுவ வேண்டும் என விரும்பினார். இதன்படி, சங்கராச்சார்ய வஜ்மய சேவே பரிஷத் அமைப்பின் சார்பில், ஸ்ரீ சங்கர பாரதி சுவாமிகள் கடந்த ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். இதனையடுத்து தற்போது, அயோத்தியில் ராமர்கோவில் அருகில் சரயு நதிக்கரையில், 15 ஏக்கரில் ஆதிசங்கரருக்கான கோயிலும், ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட உள்ளது.