அத்து மீறும் சீனாவுக்கு பதிலடி தர தயாராகுது இந்தியா

சில தினங்களுக்கு முன் இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறியது. அதையொட்டி, சிக்கம் மாநில எல்லையில் சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன் நடுஇரவில் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்போதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சண்டை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. ஏற்கனவே எவரெஸ்ட் சிகரம் தொடர்பாக வரைபடத்தை மாற்றி சீனா பல மோசடிகளை செய்தது. இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் விமானங்கள் எல்லை மீறியதாகவும் மே 5ல் சீன விமானங்கள் லடாக் எல்லைக்குள் புகுந்தது.

இதையொட்டி, இந்திய சுகோய் விமானங்கள் ரோந்து பணியில் சென்றதால் சீன விமானங்கள் வெளியேறிவிட்டது. ஆயினும் தொடர்ந்து சீனா அத்துமீறி நுழைவது தொடர்கதையாக உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாக பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக நிற்கும்போது சீனா தற்போது இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.