அத்துமீறும் ஆக்கிரமிப்பு; கோவில் நிலத்திற்கு பட்டா?

கோயில் நிலங்களில் உள்ளவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க பரீசிலனை செய்யுமாறு  தமிழக அரசின் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கோயில் நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்க இவர்கள் யார்?  ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை பாதுகாக்க வேண்டும். பட்டா போட்டு கொடுக்க கூடாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. ஏற்கனவே பல கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படுகிறது.

இதே தமிழக அரசு வக்பு வாரியம், கிறிஸ்தவ மிஷனரி நிலங்களை மக்களுக்கு பட்டா போட்டு கொடுக்க துணியுமா? ஹிந்துக்களின் கோயில் நிலங்களை பட்டா போட்டு, அங்கு மாற்று மத கட்டிடங்கள் வரவும் வழிவகை செய்கிறது இந்த உத்தரவு. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஆதாயத்துக்காக, எதிர்ப்பு இல்லை என கூறி கோயில் நிலங்களையும் பட்டா போட அரசு துணிந்தால், ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கோயில் நிலங்களை தாங்களே பாதுகாக்க முன்வர வேண்டும். தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஹிந்துக்கள் முதலில் தங்கள் பகுதிகளிலுள்ள கோயில் நிலங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் பகுதி கோயில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கக்கூடாது, என ஒரு கடிதத்தை கோயில் செயல் அலுவலரிடம் கொடுப்பதுடன் அறநிலையத்துறைக்கு ஒரு மின்னஞ்சலும் அனுப்பிவையுங்கள்.

ஒன்றிணைவோம்! கோயில்களையும் அதன் சொத்துகளையும் பாதுகாப்போம்!! ஆதரவானவர்களை மட்டுமே ஆதரிப்போம்!!!