அசாமின் அசத்தல் முடிவு

வருகின்ற பிப்ரவரி முதல் மதரசாக்களுக்கு அரசு தரும் மானியத்தை நிறுத்துவது என அசாம் அரசு தெரிவித்துள்ளது. இனி மதரசாக்கள் வழக்கமான பள்ளிகளாக செயல்படும். அங்கு உருதும் கற்பிக்கப்படும். மதத்தை கற்பிப்பது அரசின் வேலையல்ல. குரானை கற்றுத்தர, சுதந்திரத்திற்கு முன்பிருந்தே மதரசாக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு மாநிலத்திலும் பைபிள், பகவத்கீதைக்கு அப்படி ஒரு ஏற்பாடு இல்லை. அசாமில் 189 அரசு உயர் மதரசாக்கள், 542 முன் மூத்த மதரசாக்கள், மூத்த மதரசா கல்லூரிகள் உள்ளன. இதற்காக 600 கோடி செலவிடப்படுகிறது. இது அரசு செலவில் இயங்கும் மதரசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.