ஹிந்து திருமணச் சடங்கை கேலி செய்யும் ஸ்டாலினே, எந்தப் புகை யாருக்குப் பகை?

‘தி.மு.க. தலைவர்கள் பலரை, ஏன் ஹிந்துக்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று என் நண்பர் ஒருவரை கேட்டேன். ஹிந்துக்களை திட்டுவது தான் மத சார்பின்மை என, அவர்கள் நினைப்பதால் பிடிக்கவில்லை என்றார் அவர். உண்மை தான்.

மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது குல்லா அணிந்து நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கிறார் ஸ்டாலின்.

கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும் ஏன்  ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்? விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு?

எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப்பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்கா திருப்பதும், ஒரு நாகரிகம் தான்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது.

முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களைத் திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகி றார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என நினைத்து விட்டாரா ஸ்டாலின்?

ஹோமப் புகை என்பது, தீமூட்டி, அதில் நெய் ஊற்றி அரிய வகை மூலிகைகளைச் சேர்த்து வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப் புறச்சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது.

மத சார்பின்மை கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர் சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம்.

குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்ததுதான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்’ காணா மல்போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.

அடுத்து, ஹிந்து திருமணங் களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரிய வில்லை.

அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அதி யற்புதமான தத்துவ உண்மை களும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா?

தெரியாமலேயே ஸ்டாலின் சிறுபான்மை யினரின் ஓட்டுகளைப் பெறுவதற்காக வெறுப்பு அரசியலில் இறங்குகிறார்.

ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *