விநாயகர் சிலை விற்பனையாளர்கள் வாழ்வாதாரம் இந்தாண்டு கேள்விக்குறி? பரிசீலிக்குமா அரசு?

கொரோனா காலகட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், சின்னகாஞ்சிபுரம், தாங்கி மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டவா்கள் காகிதக் கூழில் விநாயகா் சிலைகளை உற்பத்தி செய்வதை குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனா். 3 அடி முதல் 12 அடி உயரம் வரை உற்பத்தி செய்யப்படும் இச்சிலைகள் ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும் ஊா்வலங்கள் நடத்தவும் அனுமதி தரப்படவில்லை. வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுமாறு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விநாயகா் சிலைகளை உற்பத்தி செய்பவா்கள், வாங்கி விற்பவா்கள், இத்தொழிலையே நம்பியிருக்கும் கூலித் தொழிலாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இந்த தகவல் காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமே, அது தவிர மற்ற மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம்?…