டெல்லி ஷாகீன்பாக் சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்தனர்.

ஷாகீன் பாக் போராட்டத்தில் தீவிரமான இருந்த சமூக செயற்பாட்டாளர் ஷாசாத் அலி உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பலரும் நேற்று பாஜகவில் முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில் “ முஸ்லிம்கள் மீது பாஜக எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டவில்லை, அவர்களைப் வளர்ச்சியின் மையத்துக்குள் கொண்டுவரத்தான் அரசு முயல்கிறது என்பதை உணர்ந்து, நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாஜகவில் இணைந்திருப்பது புதிய உற்சாகத்தை தருகிறது.

பாஜக டெல்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு கூறுகையில் “ யாரும் தேசியஅடையாளத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள். சிஏஏ குறித்து பேச்சு எழுந்தபோது, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் மக்களை தவறான பாதைக்குதிருப்பினர். ஆனால், அவர்கள் தற்போது எதையும் நிரூபிக்கத் ேதவையில்லை என்பதை உணர்ந்விட்டனர். யாருடைய வாக்களிக்கும் உரிமையும், குடியுரிமையும் பறிக்கப் படாது. பாஜக மூலம் தான் நீதி பெற முடியும் என்பதை உணர்ந்த பின், ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமன முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

One thought on “டெல்லி ஷாகீன்பாக் சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்தனர்.

  1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்ற பாரதியின் பாடல் வரிகள் பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில் இப்போது உண்மையாகிக் கொண்டு வருகின்றன.

Comments are closed.