யார் இந்த ஜின்னா?

முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர். 1946ல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் பல பகுதிகளில் இவரது கும்பல் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை வெட்டிச் சாய்த்தது.

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை கைவிடக் கோரி பம்பாயில் உள்ள ஜின்னா மாளிகைக்கு சென்று காந்திஜி மன்றாடினார். 18 நாட்கள் நடையாய் நடந்தார். ஆனால் ஜின்னா கடைசிவரை மசியவில்லை.

காந்திஜி ஜின்னாவை எப்போதும் காயித் – ஏ – ஆஜம் (பெரிய தலைவர்) என்றே அழைத்தார்.

ஜின்னாவோ, காந்திஜியை தொடர்ந்து ‘மிஸ்டர் காந்தி’ என்றே அழைத்தார். கடைசியில் ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கையை காந்திஜி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஜின்னாவின் படம் அலீகர் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர் அரங்கத்தில் காந்திஜி, நேரு படங்களுடன் மாட்டப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தேசபக்த மாணவர்களும் பொதுமக்களும் அணி திரண்டனர். அலீகர் பாஜக எம்.பி. சதீஷ் கௌதம், படத்தை அப்புறப்படுத்துமாறு பல்கலைக் கழக துணை வேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சிக்காரரான கோரக்பூர் புதிய எம்.பி. ஜின்னாவை காந்தி, நேரு போன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாரத நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்றும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், மேலப்பாளையம் உள்பட பல ஊர்களில் ஜின்னா தெரு என்ற பெயர் நீடிக்கிறது. முஸ்லிம் குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஜின்னா பெயர் சூட்டி வருகின்றனர்.

தேசத்தை துண்டாடிய ஜின்னாவை போற்றும் போக்கை முஸ்லிம்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். வாழ்வது ஒரு நாட்டில், பக்தி மற்றொரு நாட்டிற்கு என்ற மனப்பான்மை மாறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *