பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் உட்பட 4 பேருக்கு பாரத் ரத்னா விருதுவை (மார்ச் 30) ஜனாதிபதி முர்மு வழங்கினார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு வீடு தேடி பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், மறைந்த முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (மார்ச் 30) நடந்த நிகழ்ச்சியில், பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத் ரத்னா விருதுவை ஜனாதிபதி முர்மு வழங்கினார். மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் சார்பில் அவர்களது குடும்பத்தினர் பாரத ரத்னா விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
வயது மூப்பு காரணமாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வர இயலவில்லை. இதனால் அவருக்கு வீடு தேடி சென்று பாரத ரத்னா விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.