பிஹார் சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் சாயம் வெளுத்தது தேசிய சக்திகளுக்கு நல்ல அறிகுறி. காங்கிரஸ் கட்சி, லாலு கட்சி கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் சி.பி.எம், சி.பி.ஐ, சி.பி.ஐ எம்.எல் என்றெல்லாம் பல அவதாரங்களில் 33 தொகுதிகளில் களமிறங்கியும் பருப்பு வேகவில்லை. வென்றது 3 இடங்களில்தான்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே போல இதே கூட்டணியில் போட்டியிட்டு கம்யூனிஸ்டுகள் 16 இடங்களில் வென்றிருந்தார்கள்; கம்யூனிஸ்ட்களின் சறுக்கல் தெளிவாகவே தெரிந்தது.
அண்டை மாநிலங்களில் துப்பாக்கி தூக்கிய மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழிப்போம் என்று பகிரங்கமாக பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தது, பீஹாரில் இடதுசாரிகளின் இம்சையில் இருந்து விடுபட வழி தேடிக் கொண்டிருந்த வாக்காளர்களுக்கு சரியான பாதை காட்டியது.
இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் வாலை ஒட்ட நறுக்க முடியாமல் போனது; ஆனாலும் அனைத்து ரக கம்யூனிஸ்டுகளும் ஓரணியில் திரளாமல் போனதுதான் தோல்விக்கு காரணம் என்று பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்களை புலம்பச் செய்து விட்டார்கள், பிஹார் வாக்காளர்கள்.
முன்பு இடசாரிதுகள் பல வேஷம் கட்டியது அவர்கள் அன்னிய சக்திகளுக்கு அடிமைப்பட்டிருந்தது அம்பலமானதால்தானே? பிஹார் வாக்காளர்கள் அவர்களை அடையாளம் கண்டுவிட்டார்கள்.