நூலிழையில் தப்பிய தேசம்

அயோத்தி ராமர் கோவில், டெல்லி இந்தியா கேட், கான்ஸ்டிடியூஷன் கிளப், கௌரிசங்கர் கோவில், டெல்லி ரயில் நிலையம், நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் குரு கிராம், ஃபரிதாபாத் என பல ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களை 32 கார் குண்டுகளால் தாக்கி, அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரை பறிப்பதே டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய டாக்டர் கும்பலின் தேசவிரோத மத வெறி சதித் திட்டம்.

டிசம்பர் 6 அன்று, நாடு முழுவதும் பயங்கரவாத அட்டூழியம் நடத்த திட்டமிட்டிருந்த அல்-ஃபலா பல்கலைக்கழக டாக்டர்கள் 7 பேரின் விவரங்கள் அம்பலமானதால் அதிர்ந்த டாக்டர் உமர் நபி, தான் பிடிபடப் போகிறோம் என்ற அச்சத்தில் தன்னையும் அழித்து கொண்டு 13 அப்பாவி மக்களின் உயிரையும் பறித்திருக்கிறான்.

ஜிஹாதி பாசறை ஒரு பல்கலைக்கழகம்!

சதித் திட்டம் தீட்டிய இடம் குகையிலோ, அந்நிய மண்ணிலோ, காடுகளிலோ அல்ல, ஒரு பல்கலைக்கழகத்தில்தான்! அந்த அல்-ஃபலா பல்கலைக்கழகம், டெல்லியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து வெறும் 12 கி.மீ. தொலைவில் தோஜ் கிராமத்தில் உள்ளது.

டாக்டர் உமர் நபி எனும் உமர் முகமது:

இவர்தான் பயங்கரவாதிகளின் மூளையாக திகழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. டில்லி செங்கோட்டை அருகே வெடிகுண்டு காரை வெடிக்க செய்து இவரும் மடிந்தார். காஷ்மீரில் உள்ள இவரது வீடு அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.

டாக்டர் முஸம்மில் அகமது எனும் முசம்மில் ஷகில்:

அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரெஸிடென்ட் டாக்டர். இவர், பயங்கரவாதிகளில் மிக முக்கியமானவர் இவரது வாடகை இடத்தில் இருந்துதான் 2,900 கிலோ வெடிபொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

டாக்டர் ஷாஹீன் சயீத் எனும் ஷோஹீன் ஷாஹித்:

அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர். பாகிஸ்தானில் ஜெய்ஷ் − இ − முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரி சாதியா அஸார். நம் நாட்டில் பெண் பயங்கரவாதிகள் பிரிவுத் தலைவர் பொறுப்பை டாக்டர் ஷோஹீனிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

டாக்டர் ஃபரூக்:

அல்-ஃபலா பல்கலைக் கழகத்தில் தனது கல்வியை முடித்து, ஹாப்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர்.

டாக்டர் நிசார்:
தலைமறைவாக உள்ள முன்னாள் அல்-ஃபலா பல்கலைக்கழகப் பேராசிரியர்.

டாக்டர் முசாபர் ராதர்:
நம் நாட்டிலிருந்து தப்பி ஓடிய முக்கிய பயங்கரவாதி.

முகமத் ஆசிப் மீர்:
அல்-ஃபலாவில் படித்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம் ( GSVM ) கல்லூரியில் படித்து வருகிறார்.

டாக்டர் பாரூக் அஹ்மத் தார் :
அல் – ஃபலாவில் எம்.பி.பி.எஸ்.,
எம்.டி. படித்த ஹாப்பூரின் ஜி.எஸ். மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர். இதுவரை அறியப்பட்ட இவர்கள் அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜிஹாதிகள்.