அயோத்தி ராமர் கோயில் காவிக் கொடியில் காணப்படும் கோவிதாரா மரத்தின் பெயர் நமக்கு ஒரு சேதி சொல்கிறது. எந்த ஒரு பாரதிய மொழி பேசுபவர் ஆனாலும், இந்த விருட்சத்தின் மகிமையை அறிந்திருப்பார்; அதற்கு அந்தந்த மொழியில் கோவிதாரவின் பெயர் இருப்பதே சான்று.
பாருங்களேன்: சமஸ்கிருதத்தில்: கஞ்சனாரம், கோவிதரஹ Kancanarah, Kovidarah. தமிழில்: சிகப்பு மந்தாரை Sigappu Mandarai. ஹிந்தியில்: கஞ்சனார் Kancanar. கன்னடத்தில்: கெம்பு மந்தாரா Kempu Mandara.
மலையாளத்தில் : சுவன்ன மந்தாரம், Chuvanna Mandaram.
தெலுங்கில்: தேவகஞ்சனமு Devakancanamu.
பல மொழிகள் பேசும் மக்கள் ஒரே ராஷ்ட்ரமாக வாழ்ந்து வருவதற்கு இது அத்தாட்சி. அறநெறி நின்ற அண்ணல் ராமபிரானைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ராமசாமி என்றும், கேரளத்தில் ராமுண்ணி என்றும், ஆந்திராவில் ராமையா என்றும், கர்நாடகாவில் ராமண்ணா என்றும், இன்னும் பல்வேறு மாநிலங்களில் ராம், ராம்லால் என்றும் பிரியமாக மக்கள் பிள்ளைகளுக்கு பெயரிட்டு வருவது, தொன்றுதொட்டு தேசம் கலாச்சார ரீதியாக, ஒரே தேசமாக விளங்கி வருகிறது என்பதன் நிரூபணம் என்பார்கள். ராமபிரானின் கோயில் காவிக்கொடி தாங்கும் மந்தார மரத்தின் வெவ்வேறு வட்டாரப் பெயர்களும், அதே போல நமது தேசிய ஒருமைப்பாட்டின் நிரூபணமே.