பயங்கர பக்கவிளைவுகள்

சீன நிறுவனமான சினோபார்ம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால் தலைவலி, பார்வை குறைபாடு, சுவை இழப்பு, சிறுநீரக பிரச்சனை போன்ற 73 வகையான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்நாட்டு மருத்துவர் தாவோ லினா தன் சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தடுப்பூசி உலகிலேயே மிகவும் பாதுகாப்பற்ற மோசமான தடுப்பூசி என்றும் கூறியுள்ள அவர், இதனால் மோசமான கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட சீன அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம், கொல்லவும் செய்யலாம் என்ற பயம் காரணமாக தன் பதிவுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே சீன அரசையும் குறை கூறிய கொரோனா குறித்தும் மருத்துவர் ஐஃபென், சீன கோடீஸ்வரர்கள் ஜேக் மா, ரென் ஷிஜியான், ஏராளமான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் நிலைமை என்னவென்பது உலகறிந்ததே.