நக்சல் வன்முறைக்கு தீர்வு

பஸ்தர் என்ற வனப்பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக மாவோயிஸ்ட் (நக்சல்பாரி) தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி, இப்போது அமைதியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
மத்திய அரசின் தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 – 2025ல் வன்முறை சம்பவங்கள் 80%க்கும் மேல் குறைந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகள் 90% வரை குறைந்துள்ளன. 2024 முதல் 2026 வரை, 500க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
2025ல் மட்டும், 500க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 ஆம் ஆண்டுக்குள், நக்சல்பாரி தீவிரவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவித்து, இப்போது “நக்சல்-ஃப்ரீ” பகுதியாக பஸ்தர் மாறும் நிலையில் உள்ளது.
பயம் நிறைந்திருந்த பஸ்தர் கிராமங்கள் இப்போது வளர்ச்சித் திட்டங்களை வரவேற்கின்றன, இப்போது பாரதத்தின் வெற்றிக் கதையாக மாறியுள்ளது. பல தசாப்தங்களின் இருண்ட காலத்திற்குப் பிறகு, இப்பகுதி அமைதி, முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வெற்றி, பிற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அமையும்.
பஸ்தர் முழுவதும் நக்சல் வன்முறை குறைந்து வருவதால், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தன் சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றன. பஸ்தர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிக்காரா கூறுகையில், “கடந்த காலத்தில் இங்கு நக்சல் அச்சுறுத்தல் இருந்தபோது, பல குடும்பங்கள் பயம் அல்லது பிற காரணங்களுக்காக மற்ற பகுதிகளுக்கு குடி பெயர்ந்தன, தற்பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக பிரதான் மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ், ஏற்கனவே 236 கிலோ மீட்டர் சாலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் 292 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட உள்ளன என்று கூறினார்.
மேலும் கோலங் – சிங்கூர் கிராமத்தை சேர்ந்த ஃபுல் தேவ் தாக்கூர் கூறுகையில், “ஆரம்பத்தில் இங்கு 107 குடும்பங்கள் இருந்தன, நிலைமை சீராக உள்ளதால் மக்கள் திரும்பி வந்து தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினர்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நக்சல் வன்முறையால் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பள்ளிகள், குடிநீர் வசதிகள், சாலைகள், பலபேடா மற்றும் கர்பா போன்ற கிராமங்களுக்கு உள்கட்டமைப்புகளை அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர்.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : குகத்யா