திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த கன்னியாஸ்திரி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், பாதுகாப்பு போலீசார் கண்ணில் மண்ணை துாவிய, கிறிஸ்துவ கன்னியாஸ்திரி, மூலஸ்தானம் வரை சென்றார்.

அரியலுாரைச் சேர்ந்த, கன்னியாஸ்திரி மற்றும் சாதாரண உடை அணிந்த பெண், ஆண் ஆகிய மூவர், செப்., 27 மாலை, 6:00 மணிக்கு மேல், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றனர்.பொது தரிசன வரிசையில், பக்தர்களுடன் கலந்து நின்று, மூலஸ்தானம் வரை சென்றனர். அதை கவனித்த பக்தர்கள், போலீசாரிடம் தெரிவித்தனர்.மூவரையும், போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கையில், தவறுதலாக வந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினர். மூவரையும் எச்சரித்து, போலீசார் விடுவித்தனர். பக்தர்கள் கூறுகையில், ‘கன்னியாஸ்திரி, கோவிலுக்குள் புகுந்தது ஏன் என, விசாரிக்க வேண்டும். ‘அவர் மீதும், உடந்தையாக இருந்தோர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு போலீசாரின் கவனக்குறைவே, இதற்கு காரணம்’ என்றனர்.