தேர்தலுக்காக ஹிந்து ஓட்டுக்களை குறிவைத்து, ‘என் மனைவி போகாத கோயில் இல்லை’ என ஸ்டாலினும், ‘ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி தி.மு.கதான்’ என கனிமொழியும் சமீபத்தில் கூறினர். கருப்பர் கூட்ட ஆதரவாளரான ஸ்டாலின் சமீபத்தில் முருகனின் வேலை தன் கையில் வைத்துகொண்டு போஸ் கொடுத்தார். ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மானாமதுரையில் உள்ள ஒரு குடிசைத் தொழிலகம் சென்றார் கனிமொழி. அங்கு தி.மு.க மகளிர் பிரிவு நகர அமைப்பாளர் கனிமொழிக்கு விநாயகர் சிலை ஒன்றை வழங்கினார். கனிமொழி அதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் வேறொருவர் அளித்த காந்தி சிலையை வாங்கி புகைப் படத்திற்கு போஸ் கொடுத்தார்.
என்னதான் தேர்தலுக்காக தி.மு.க தலைவர்கள் ஹிந்து வேஷம் போட்டாலும் உள்ளூர அவர்கள் ஹிந்துக்களின் எதிரியே என்பதற்கு இது ஒரு உதாரணம்.