‘’தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பல அறிஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய புனிதமான தமிழகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி தெரிவித்தார். தமிழகம் கலாச்சார ரீதியில் மேன்மையடைந்த மாநிலம் என்று வெளி மாநிலத்தில் இருந்து வரும் நீதிபதியே தமிழகத்தின் கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் போற்றிப பேசும் போது தமிழகத்திலேயே பிறந்து தமிழ் மக்களின் உழைப்பை சுரண்டி பிழைத்த தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு தமிழகத்தின் கலாச்சாரத்தை மதிக்க தெரியவில்லை. திருக்குறளை மனித மலத்தோடு ஒப்பிட்டு பேசிய ஈ.வே.ரா.வின் கொள்கையை பின்பற்றும் தி.மு.க.வுக்கு உரைக்கும் வகையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு இருந்தது.
முஸ்லிம் கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து சொல்லும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முஸ்லிம், கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு அவர்களின் மதத்தை பெருமைப்படுத்த அங்கு ஹிந்து மதத்தை பற்றி தரக்குறைவாக பேசுவது அவருக்கு விருப்பமான விஷயமாகும். தமிழகத்தில் 80 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் ஹிந்துக்களை பழித்து பேசியும் தி.மு.க.விற்கே ஹிந்துக்கள் ஓட்டு அளிக்கும் வரை அவர் திருந்த வாய்ப்பில்லை. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற நடுநிலையான உயர்ந்த பதவியை ஏற்க இருக்கும் ஏ.பி.சாஹி ஹிந்து மத கடவுளான ராமானுஜரும், திருவள்ளுவரும் வாழ்ந்த பூமியில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன் என்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும்.