ராமர் கோவில் கட்ட அடுத்த கட்ட நடவடிக்கை

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து, அறக்கட்டளை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அறக்கட்டளை தொடர்பான தீர்ப்பு விவரத்தை முழுமையாக ஆராய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, தீர்ப்பை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறது. மேலும், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வக்கீலான அட்டார்னி ஜெனரல் ஆகியோரின் கருத்துகளை கேட்டுப்பெறவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சுப்ரீம் கோர்ட்டு கூறியபடியே அறக்கட்டளை அமைக்க முடியும் என்று கருதுகிறது.

இந்த அறக்கட்டளைதான், ராமர் கோவில் கட்டுமான

த்துக்கான செயல்பாடுகளை தீர்மானிக்கும் என்பது தெரியவந்துள்ளது