ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம்

கிருமி நாசினி முன்பு ஷ்பெரேயர் கொண்டு தெளிக்க பட்டது. அதற்கு அதிக ஆட்களும் , அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம் மேலே இருந்து கிருமிநாசினி தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ட்ரோன்களை தயாரித்து , விவசாய நிலங்களில் மேலிருந்து தெளித்து சோதனை நடத்தப்பட்டது . இதற்காக 20 ட்ரோன்கள் பெறப்பட்டு இன்று முதல் சென்ட்ரல் , கோயம்பேடு பேருந்து நிலையம் , மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மேலிருந்து கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தீவிரமாக பாதிக்கப்பட்ட சீனாவில் இதே பணிக்காக ஆயிரக்கணக்கான ட்ரோன்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *