கொரானா தொற்றைத் தடுக்க மஞ்சள் நீரை தெளிக்கும் ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர். மேலும் ஈரோட்டில் லாரிகள் மூலம் வீதி வீதியாக மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில் பொதுமக்கள் லாரிகளில் கொண்டு வரப்படும் மஞ்சள்நீரை குடங்களில் பிடித்து தங்களது வீடுகளின் முன்பு தெளித்து வருகின்றனர். இடையன்காட்டு வலசு, மேட்டூர் சாலை, பெரியவலசு நால்ரோடு, நேதாஜி நகர், திலகர் வீதி, எம்.ஜி.ஆர்.நகர், சுப்பிரமணிய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. தவிர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரில் முக்கிய சாலைகள், நிழற்குடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.