ராமபிரான் வனவாசம் சென்ற பகுதிகளில் முக்கிய இடங்களான சித்திரகூட் முதல் அமர்கண்ட் வரையிலான இடங்கள் சுற்றுலா தலமாக்கப்படும். இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். ராமரின் தாய் கௌசல்யை தொடர்புடைய பகுதிகளும் கண்டறியப்பட்டு அவையும் இதில் இணைக்கப்படும் என மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு ராமாயணா எக்ஸ்பிரஸை வெர்றிகரமாக இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. ராமர் வனவாசம் சென்றது நம் தமிழகத்தின் வழியாகத்தான். அதை குறிக்கும் இடங்களும் இங்கு ஏராளமாக உண்டு. தமிழக அரசு அவற்றை மேம்படுத்துமா. மக்களின் ஆன்மீக தேடலுக்கு வழி வகுக்குமா. சுற்றுலாவை மேம்படுத்தி வலம்
காணுமா?