உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்க மேற்கொள்ளப்படும் ஊரடங்கு நடவடிக்கைகளால் எந்த ஒரு நபரும் உணவின்றி கஷ்டப்படக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளஅம்மா நில முதல்வர் யோகி ஆதித்திய நாத், இதற்காக சமூக சமையற்கூடங்களை திறக்க உத்தரவிட்டுள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டுள்ளார். மேலும், கொரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன், முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் உ.பி அரசு முடுக்கிவிட்டது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குமாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது. ஏற்கனவே கொரோனா காரணமாக மத்திய அரசால் தேசமெங்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது நினைவு கூரத்தக்கது.