குறிவைக்கப்படும் பட்டியல் சமூகத்தினர்

டெல்லியை சேர்ந்த ஜாமியா மிலியா பல்கலைக் கழகம் அங்கு வேலை செய்துவந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த 23 பேரை திடீரென வேலையை விட்டு நீக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் அங்கு சுத்தம் சுகாதார துறையில் வேலை செய்துவந்தவர்கள். அங்கு வேலை செய்து வரும் 132 பேரில் 23 பேரை வேலை நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்தது. உடனே அங்கு பணி செய்யும் 23 பட்டியல் சமூக மக்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கியுள்ளது, நாங்கள்தான் எப்போதும் இவர்களால் குறிவைக்கப்படுகிறோம் என பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் கூறியுள்ளார்.