ஓர் நாள் நீதி வெல்லும்

2017ஆம் ஆண்டு கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் என்ற பெண் எழுத்தாளர் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்து சில மணி நேரங்களிலேயே ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் இயக்கத்தைக் குறை கூறி அந்த சித்தாந்தம் உள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்குவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், கொலை வரை போகவும் தயங்க மாட்டார்கள் என்று நம்ம ஊர் கழகக் கண்மணிகள் போல் பேசினார்.
இத்தனைக்கும் அப்பொழுது கர்நாடக போலீஸ் விசாரணையையே துவங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அன்று கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது சித்தராமையா -காங்கிரஸ் கட்சி. நிலைமை இவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சியினரும் இடதுசாரிகளும்களும் மீண்டும் மீண்டும் சங்பரிவார் இயக்கங்களை வம்புக்கு இழுத்தார்கள். குறிப்பாக கர்நாடகா தேர்தல் 2018லும் இந்தாண்டு பாராளுமன்ற தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ராகுல் காந்தியும் சீதாராம் யெச்சூரியும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசியவர்கள்.

ராகுல் காந்தி, இதற்க்கு முன்பே தேசிய இயக்கமான ஆர் எஸ் எஸ் மீது மஹாத்மா காந்தியை கொன்றவர்கள்
என்று பேசியதற்கு வழக்கைச் சந்தித்துக் உள்ளார். இந்த நிலையில், ராகுலின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார், மும்பையை அடுத்த தானே நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் துருதிமன் ஜோஷி.

நான் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கும் போதே இது ஒரு சவாலான ஒன்று என்பது எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் கட்சி தலைமையில் இருக்கும் ராகுலும் சீதாராம் யெச்சூரியும் இப்படி பேசுகிறார்களே என்று உண்மையில் வேதனைப் பட்டேன். ஏனென்றால், இவர்கள் பேச்சை உண்மையென்று இவர்கள் பின்னால் நிற்கும் இளைஞர்கள் நம்புகிறார்களே என்ற ஆதங்கமும் கூடவே வருகிறது. அதனால் தான் சட்ட ரீதியில் இவர்கள் இருவர் வழியாக  இன்னம் எதிர்காலத்தில் இதைப் போல வாய்க்கொழுப்பு எடுத்துப் பேச நினைப்பவர்களுக்கும் பாடம் புகட்ட நினைத்தேன். அதற்கான ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, தங்கள் மீது குற்றம் இல்லை என்று சொல்லி ராகுலும் யெச்சூரியும் பெயில் பெற்றார்கள். ஆனால் இரண்டு நாள் முன்னால் கோர்ட்டில் ராகுல் காந்தியின் வக்கீல் தன் கட்சிதாரர் மீது உள்ள வழக்கையும் யெச்சூரி மீது உள்ள வழக்கையும் இணைத்து நடத்தக் கூடாது என்று வாத்திட்டார். ( காரணம் இருவரும் வேறு வேறு கட்சித் தலைவர்கள் ) ஆனால் தானே நீதியரசர் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனவரி 6, 2020 அன்று மீண்டும் வழக்கு நடக்கும் என்று ஒத்தி வைத்துள்ளார். துருத்திமன்னுடைய தந்தை சச்சித் ஜோஷி தன் மகன் மீதும் இந்நாட்டு நீதித் துறை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவர் கடந்த நாற்பது

ஆண்டுகளுக்கும் மேல் ஸ்வயம்சேவக் – ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர்.

துருதிமான் ஜோசி ஜோஷி போலவே நாமும் நீதி வெல்லும் என்று நம்புவோம்.

 

 

வழக்கறிஞர் துருதிமான் ஜோசி