குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பை பயன்படுத்தி, டில்லியில் பயங்கரவாத தாக்குல் நடத்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த தம்பதியை, போலீசார் கைதுசெய்தனர்.
டில்லியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்தியவர்கள் மோதிக்கொண்டதால், பெரும் கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் அதிக மானோர் பலியாகினர்.கலவரம் தொடர்பாக, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்காணிப்புஇந்நிலையில், டில்லி ஜாமியா பகுதியில், காஷ்மீரைச் சேர்ந்த தம்பதியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது பற்றி போலீசார் கூறியதாவது:ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர், ஜஹான்சாயிப் சமி; இவரது மனைவி ஹினா பஷீர் பெய்க்.இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான, ஆப்கானிஸ்தானில் செயல்படும், ஐ.எஸ்.கே.பி., எனப்படும், ‘இஸ்லாமிக் ஸ்டேட் கோரோசன் பிராவின்ஸ்’ என்ற, பயங்கரவாத அமைப்புடன், நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். இருவரும், டில்லியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட, முஸ்லிம் இளைஞர்களை துாண்டி விட்டுள்ளனர்.
ஐ.எஸ்.கே.பி., அமைப்புடன், சமிக்கு உள்ள தொடர்பை, உளவுத்துறை ஏற்கனவே கண்டுபிடித்து, அவரை கண்காணித்து வந்துள்ளது.விசாரணைடில்லியில், தற்கொலை படை தாக்குதல் நடத்தவும், அதற்கான ஆயுதங்களை வாங்கும் முயற்சியிலும், சமி ஈடுபட்டிருந்தார். சமியின் மனைவி ஷீனா, பயங்கரவாத அமைப்புகளுக்கான சமூக வலைதளங்களில், தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில், கருத்துகளை பதிவிட்டுள்ளார். இருவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.