எழுமையான கொண்ட்டாத்தில் ஸ்ரீராமநவமி

வெகு விமர்சியாக கொண்டாட வேண்டிய இந்த வருட ராமநவமி கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவின் நாடு முழுவதும் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அதனால் பக்தர்கள் எடுத்த முடிவு  கோவில்களில் திரளாகக் கூட கூடாது அவ்வளவு தானே. அவரவர் வீடுகளில் ராமர் பட்டாபிஷேகம் வைத்து பூஜை, நிவேதனம் செய்வதற்கு முன்னர் கிராமங்களில் மக்கள் செய்த நவீன கொண்டாட்டம் வீட்டு வாசலில் மிகப் பெரிய கோலங்கள் போட்டனர். வண்ணக்கோலங்களின் பக்கவாட்டுகளில் ஸ்ரீராம் ஸ்ரீராம் என்றோ, ஸ்ரீராமநவமி என்றெல்லாம் எழுதி ஸ்ரீராமனைத் தங்கள் இல்லத்திற்கு வர வைத்தனர். கோலங்களின் மேல் பலர் குத்து விளக்குகள் வைத்து பூ வைத்து விளக்கேற்றினர். வீட்டிற்குள் பூஜை, புனஸ்கரங்கள் செய்தனர். ராம விக்கிரஹங்களை வீட்டில் வைத்து வழிபடுவோர் ஸ்ரீராமருக்கு பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீராம மந்திரங்கள் ஓத மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பல மணி நேரங்கள் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்கின்ற நாம ஸ்மரணங்கள் ஜெபித்து தங்கள் ஸ்ரீராமநவமி விரதங்களை முடித்துக் கொண்டனர்.

திருச்சிக்கருகே திருப்பட்டுரில் உள்ள தெருக்களில் உள்ள சுமார் 100 வீட்டு வாசல்களில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு, வேப்பிலை வைத்து வாசலிலும் உள்ளேயும் விளக்கேற்றி ஸ்ரீராம பூஜைக்கு அச்சாரம் வைத்து பூஜைகளைத் தொடங்கினர். அரியலூர் மாவட்டத்தில் கூவத்தூர், சேனாதிபதி, ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் முருக்கன்குடி, வி.களத்தூர், மற்றும் பாடாலூர் ஆகியவற்றில் சுமார் 250 வீடுகள், மற்றும் புதுச்சாவடி பிச்சனூர் இவற்றில் சுமார் 750 வீடுகளில் ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்கள் குறைவில்லாமல் நடைபெற்றன. இவ்வளவு கொண்ட்டதிலும் சமுக இடைவெளி பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(தகவல்; குணா, ரமேஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *