அமெரிக்காவின் பொய் பிரச்சாரம்

2018-ம் ஆண்டுக்கான உலக மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையில் இந்தியாவை பற்றி குறிப்பிட்டுள்ளது அப்பட்டமான பொய் பிரச்சாரம்.  ஒரு நாட்டின் இறையான்மையில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவின் செயல்பாடு அப்பட்டமான  சட்டாம்பிள்ளை தனமாகும்.  அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள்,  கடந்த நான்கு ஆண்டுகளாகவேஈ மோடி அரசின் மீது,  இந்தியாவில் உள்ள கிறிஸ்துவ அமைப்புகளின் குற்றசசாட்டுகளாகவே அறிக்கை அமைந்துள்ளது.

 முக்கியமன மூன்று விஷயங்களை ஆழமாக குறிப்பிட்டுள்ளார்கள்.  வெளிநாட்டு நிதியுதவி பெறும் அரசுசாரா அமைப்பை பதிவு செய்வதற்கான விதிகள் மத சிறுபான்மை குழுக்களுக்கு அதிகார பாகுபாடுடன்  செயல்படுத்தப்பட்டன. ( Rules on the registration of Foreign-funded non governmental organization (NGOs) were discriminatorily implemented against religious minority groups ). 2018-ல் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுகள், மத மாற்றச் தடை சட்டத்தை மற்றும் பசுவை கொல்வதை தடுக்கும் சட்டத்தை,  ஹிந்து அல்லாதவர்கள் மீதும், தலித் மீதும் கடுமையாக பயன்படுத்தினார்கள் ( In 2018 approximately one-third of state governments increasingly enforced anti-conversion and / or anti- cow slaughter laws discriminatorily against non-Hindus and Dalits alike )  மத மாற்றம் என்ற பெயரில் கிறிஸ்துவர்கள் மீது வன்முறை தாக்குதல்களும், மத மாறிய கிறிஸ்துவர்கள் கட்டாயப்படுத்தி தாய் மதம் திரும்ப வைத்தது  என அறிக்கையில் இம் மூன்றையும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள்

          என்.ஜி.ஓ. பற்றியது – எந்தவொரு செயலும் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்குமானால் அது தடை செய்யப்படும் என்ற கொள்கையை வைத்துக் கொண்டு, வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட NGOs க்களின் உரிமங்கள் புதுபிக்க அனுமதி வழங்கவில்லை. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை, ஹிந்து அல்லாத NGOs மீது மட்டுமே இத்தகைய நடவடிக்கை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் NGOsக்கள் மீது நடவடிக்கை எடுத்ததின் காரணமாக, 1,50,000 இந்திய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் நிறுத்தப்பட்டன.  வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் கிறிஸ்துவ மிஷனரிகளின் NGOs மீது மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் மத சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.

  இந்திய நாட்டின் இறையான்மைக்கும், பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கும் NGOs மட்டுமே நடவடிக்கைக்கு உள்ளானது.   ஆண்டுதோறும் தங்களின் வரவு செலவு கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் உரிமம் புதுப்பிக்க மாட்டாது என்பது விதி.  கடந்து  ஆறு ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்தும் தாக்கல் செய்யாத நிறுவனங்களின்  உரிமத்தை புதுபிக்க அனுமதிக்கவில்லை.  இவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத NGOs கிறிஸ்துவர்களால் நடத்தப்படுவது என்பதால் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.  உரிமம் புதுபிக்காத NGOs வோர்ல்ட் விஷன் இந்தியா,  2014-2015-ல் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ357 கோடி பெற்றதற்குறிய கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை.  பிலிவர்ஸ் சர்ச் இந்தியா என்ற அமைப்பு 2014-2015-ல் ரூ125 கோடி பெற்றதற்குறிய கணக்கு தாக்கல் செய்யவில்லை.  எனவே இவ்வாறு எஃப்சிஆர் எனப்படும் வெளிநாட்டு பங்களிப்ப ஒழுங்கு முறை சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் உரிமம் ரத்து செய்து, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

          மேற்படி  NGOs  நாட்டின் வளர்ச்சி திட்ட பணிக்கு இடையூறாகவும் செயல்பட்டது.  குறிப்பாக கூடங்குளம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக கிறிஸ்துவ சர்சுகள் போராட்டம் நடத்திய போது, இவர்களுக்கு ஆதரவாக பல NGOs  நிதி உதவி செய்தன.

     கட்டாய மத மாற்றம் – மத மாற்றம் –  ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது என்பது அடிப்படை உரிமை என கருதுவதால்,  மத மாறிய கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி மீன்டும் தாய் மதம் திருப்பவது பற்றிய கருத்தை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  கார் வாப்ஸி என்பது அச்சுறுத்தி, வன்முறையின் மூலம்,  தாய் மதம் மாற்றம் நடைபெறுகிறது.  இந்த கருத்து முற்றிலும் தவறானது.  நாடு விடுதலை பெற்ற பின், வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில், கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாட்டால், பெரும்பான்மையான இந்து மக்கள் மத மாற்றத்தின் மூலம் கிறிஸ்துவ மாநிலமாக மாறியுள்ளது.   கிறிஸ்துவர்கள் ஆசை காட்டி மத மாற்றம் செய்வது மத சுதந்திரம் என்றால், தாய் மதம் திரும்ப சில காரியங்களை செய்தால், மத சுதந்திரத்திற்கு ஆபத்து என அலற வேண்டிய அவசியம் என்ன.

          அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடு –  அமெரிக்காவின் அறிக்கையில்  அஸ்ஸாம் மாநில மக்களின் குடியுரிமை தேசிய பதிவேடு பற்றிய செய்தியை திரித்து கூறியுள்ளது. 24.3.1971க்கு பின் பிறந்தவர்கள் தங்களின் பிறப்பு சான்றிதழ்கள் சமர்பிக்க வேண்டும் என்ற விதியை வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.  1951க்கு பின்னர் 2015-ல் தான் முதன் முதலில் தேசிய பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது.  1971-மார்ச்சு மாதம் 24க்கு பின்னர் பிறந்தவர்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து குடியுரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு உரிய ஆவணங்கள் சமர்பிக்காத  லட்சக்கணக்கானவர்கள் பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளார்கள். இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் அறிக்கை உள்ளது.  உண்மையில் அஸ்ஸாமில் நடந்து என்ன என்பதை பற்றிய விவரங்கள் ஒரு வரி கூட அறிக்கையில் கிடையாது.

       1951-ல் முதன் முதலாக தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாமில் தயாரிக்கப்பட்டது.  பதிவேட்டின் படி இந்திய குடிமக்களும், சட்ட விரோதமாக குடியேறிய கிழக்கு பாகிஸ்தானியரையும் அடையாளம் கானும் பணி நடைபெற்றது.  ஆனால் கண்டறியப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.  இதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தானிலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமானது.  1951க்கும் 1961க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அசாமில் மட்டும் மக்கள் தொகை எண்ணிக்கை 25 சதவீதம்.  இந்த எண்ணிக்கை 1971க்கு பின்னர் 50 சதவீதமாக அதிகரித்தது.  இதன் காரணமாக அசாமியர்களின் மத்தியில் அச்ச உணர்வும், பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உருவானதாக கருதியதால், பெரும் போராட்டங்கள் வெடித்தன என்ற உண்மையை அமெரிக்கா புரிந்து கொள்ள வில்லை.

                2008-ல்  அசாமில் கலவரம் வெடித்த போது, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில்,  அத்வானி அவர்கள், அசாம் மாநிலத்தில் நடக்கும் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல்.  ஊடுருவியதின் காரணமாக அசாம் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் ஊடுருவியவர்கள் பெரும்பான்மையினராக மாறி, உள்ளுர்  மக்கள் சிறுபான்மையினராக மாறிவிட்டனர். சட்ட விரோதமாக ஊடுருவியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  இல்லையெனில், சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், இது தொடர் கதையாக மாறிவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

     சட்ட விரோதமாக ஊடுருவியர்கள் மட்டுமில்லாமல், உரிய ஆவணங்களுடன் வந்தவர்கள் கூட, விசா காலம் முடிந்த பின்னர் தாய் நாடு திரும்பவில்லை.  1972 முதல் 1997  வரை இந்தியாவிற்கு உரிய ஆவணங்களுடன் வந்தவர்களின் எண்ணிக்கை 9,91,013 என்றும் இவர்கள் திரும்பி போகவில்லை, இவ்வாறு வந்தவர்கள் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தங்கி விட்டார்கள் என ஒரு வழக்கில் மேற்கு வங்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் தெரிவித்துள்ளது.  ஆனால் உண்மையில் 2005-ம் வருடம் 11,80,000 பேர்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தார்கள் என்றும், இவர்கள் திரும்பி போகவில்லை என்பதையும் உறுதிப் பட அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.   தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சர்களின் குழுவில் மேற்படி சம்பவங்களை சுட்டிக்காட்டி,  மத்திய,  மாநில அரசுகள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பு எழுதியுள்ளார்கள்.  இந்த உண்மையை அமெரிக்கா கண்டு கொள்ளாமல், இந்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றங்களை வெறுத்தல் மற்றும் மத  சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு தூண்டுதல் – 2018-ல் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன.  2018- ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த இந்து விழாவின் போது, இந்துத்துவா தீவிரவாதிகள், முஸ்லீம்களை இழிவுபடுத்தி, முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.   கிறிஸ்துவ சர்சுகளுக்கு உட்பட்ட பல்வேறு ஆய்வு குழுக்களின் அறிக்கை படி, நேரடியாகவே மத அடையாளத்தை வைத்துக் கொண்டு, சிறுபான்மையினருக்கு குறிப்பாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் வேறுபாடுகள் காட்டுவதும், அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க மறுப்பதும் தொடர் கதையாக நடக்கிறது.  தமிழ்நாட்டில் உள்ள நான்கு சர்சுகளுக்கு இந்துத்துவா தீவிரவாதிகளால்  எச்சரிக்கை  விடுக்கப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது.

        இந்துத்துவ தீவிரவாதிகள் என குறிப்பிட்டது,  வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும்.  ஏன் என்றால், காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய வார்த்தையை அமெரிக்காவின் நிர்வாகமும் பயன்படுத்தியுள்ளது.    இந்துக்களுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பேசும் பேச்சுகளை, அமெரிக்க அரசு கண்டு கொள்ளவில்லை.  அஸாதுதீன் ஒவைசி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது,  ஐந்து நிமிடம் காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் இருக்கவும்,  இந்துக்களை ஒரு வழி பண்ணுகிறேன் என கூறியது வன்முறையை தூண்டுவது என்பது அமெரிக்காவிற்கு தெரியாது.   மத மாற்ற சட்டம்  உள்ள போது,  மத மாற்றம் நடத்தும் பாஸ்டர்களை கைது செய்தது தவறு என அமெரிக்க தெரிவிப்பது அப்பட்டமான அத்துமீறல்கள்.

          அமெரிக்காவின் அறிக்கையில், ஹிந்து அல்லாத மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மீது அபண்டமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.  கேரளத்தில்  பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப்  இந்தியாவின் மாணவர் அமைப்பு, பேரராசிரியரின் கையை வெட்டியது, லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து மாணவிகளை முளை சலவை செய்து மத மாற்றம் செய்யவும்,  மத மாறிய மாணவிகளை ஜிகாத் என்ற போர்வையில் பயங்கரவாதிகளாக மாற்றுவதும் தொடர் கதையாக இருப்பதை அமெரிக்க கண்டு கொள்ளவில்லை.

        இந்தியாவில் மத சுதந்திரம் பரிபூர்ணமாக இருக்கிறது என்பதை அமெரிக்க உணர்ந்து கொள்ள வேண்டும்.  மத வன்முறையை தூண்டுபவர்கள் மீது பாகுபாடு இல்லாமல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துவர்கள் என்ற பாகுபாட்டுடன் செயல்படுகிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளை சூட்டிக் காட்ட இயலும்.  மேலும் அமெரிக்காவின் அறிக்கை,  மோடியின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, கிறிஸ்துவ அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் தொகுப்பே, உலக மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையில் கானப்பட்டுள்ள குறிப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது.  மேலும் 2018 டிசம்பர் மாதம் அமெரிக்காவின் கிழக்கு தெற்கு மத்திய ஆசியாவிற்கான சிறுபான்மையினரின் மூத்த ஆலேசகர் நாக்ஸ் தாமஸ்,  இந்தியாவில் உள்ள கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கருத்துக்களை மட்டுமே கேட்டதாக அறிக்கையில் உள்ள குறிப்பு தெரிவிக்கின்றது.  எனவே அமெரிக்காவின் அறிக்கை முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் நடத்தும் தாக்குதலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *