முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் எப்படி தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் அன்றாடம் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு நமது தேசத்தின் அருகில் உள்ள வங்கதேசமும் பாகிஸ்தானுமே சாட்சி. அவ்வகையில், சமீபத்தில் வங்கதேசத்தில் நரைலின் லோஹாகராவின் சஹாபரா பகுதியில் வசிக்கும் ஆகாஷ் சஹா என்ற இளைஞன் முகநூலில் பதிவிட்ட ஒரு செய்தி தங்களை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி ஒரு முஸ்லிம் கும்பலை சேர்ந்தவர்கள் அந்த இளைஞனின் தந்தை அசோக் சாஹா நடத்திவரும் மளிகைக்கடை, வீடு, அருகில் இருந்த மற்ற ஹிந்துக்களின் வீடுகளை கடுமையாகத்தாக்கி சேதப்படுத்தினர். இதனை சாக்கிட்டு அங்கிருந்த சஹாபரா கோயில் மீது கற்களை வீசி தாக்கியதுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்துத் தள்ளி நாசம் செய்தனர். ஆகாஷ் சஹா அங்கிருந்து தப்பியோடினார். வழக்கம் போலவே இந்த தாக்குதலும் அவர்களது வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த கும்பலைக் கலைக்க வங்கதேச காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் வெற்றுக் குண்டுகளை வீசி கட்டுக்குள் கொண்டுவருவதற்கு இரவு வெகுநேரம் ஆனது. இளைஞனின் தந்தையை கைது செய்துள்ள காவல்துறையினர், வன்முறை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.