ஹிந்து அல்லாதோர் கொடிமரம் தாண்டிச் செல்லத் தடை!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோயிலும் ஆன்மீக நம்பிக்கையால் செதுக்கப்பட்டவை. அத்தகைய ஆகமக் கோயில்களின் மரபுகள் சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிகழ்வுகளின் பின்னணியில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. முருகன் அடங்கிய அமர்வு அக்டோபர் 23 அன்று ‘தங்கம் வெங்கடேஷ் (எதிர்) தமிழ்நாடு அரசு’ வழக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 1972 மற்றும் 2024 நீதிபதிகளின் வழிகாட்டல்களை இத்தீர்ப்பு நினைவூட்டுகிறது.
தீர்ப்பின் சாராம்சம்

கொடிமரத் தடை:

ஆகமக் கோயில்களில், ஹிந்து அல்லாதவர்கள் கொடிமரத்தைத் தாண்டிச் செல்லத் தடை; எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
உறுதிமொழி: தரிசனம் செய்ய விரும்பும் பிற மதத்தினர், அத்தெய்வத்தின் மீது உண்மையான நம்பிக்கை இருப்பதாகப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.

சட்ட விதிகள்:

HR&CE சட்டப்பிரிவு 10 மற்றும் 24(4)-ன்படி, கோயில் ஊழியர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். கோயில்களின் ஆகம விதிகளும், வழிபாட்டு உரிமைகளும் விளம்பர மோகத்திற்கு பலிகடா ஆக்கப்படக் கூடாதென்பது, நீதிமன்றத்தின் கருத்து மட்டும் அல்ல, வெகுஜன மக்களின் வேண்டுதலும் அதுவே. மரபுகளை மதிப்பதே உண்மையான மனிதநேயம் என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

போராட்டக் களங்களை எக்காரணம் கொண்டும் காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

 

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டங்களால், இந்த தீபாவளித் திருநாள் காலத்தில் சிறு வணிகர்களும், கடைக்காரர்களும் சொல்ல முடியாத அளவிற்கான துயரங்களுக்கும், பெரும் வேதனைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் தொடர்ந்தால், வியாபாரிகளின் வியாபாரம் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!
கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து முடக்கம் போன்றவற்றால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பறிபோனது மட்டுமின்றி, தேவையற்ற செயற்கைப் பொருளாதார பேரிடியையும் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். வியாபாரத்தின் உச்சக்கட்ட காலமான பண்டிகை நேரத்தில், சுமார் ₹14,000 கோடிக்கும் அதிகமான மாபெரும் வர்த்தக இழப்பு ஏற்பட்டு, வியாபாரிகளின் தலையில் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.
இந்நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றம் போரட்டங்களுக்கு எதிரான வழக்கில், “போராட்டக் களங்களை எக்காரணம் கொண்டும் காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது; போராடும் உரிமை என்பது மற்றவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை விட எப்போதுமே பெரிதல்ல” என அளித்துள்ள தீர்ப்பு, சாமானிய மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்களாட்சியில் போராடுவது உரிமைதான், ஆனால் சாமானிய மக்களின் பிழைப்பை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அரசியல் சுயலாபத்திற்காக மக்களின் மகிழ்ச்சியையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அடகு வைக்கும் சுய விளம்பரப் போரட்ட அரசியலுக்கு, இதுவே சரியான சவுக்கடியாகும்!!!

கட்டுரையாளர்: எம். ஶ்ரீராம்