கார்த்திகை தீபம் – சிறப்பு என்ன ? – வீ. கோபு, கோபாலபுரம்
சிவபெருமான் நெருப்பாக உயர்ந்து நின்று காட்சி தந்த நாள். இடம் திருவண்ணாமலை. எனவேதான் அங்கே மலையின் மீது தீபம் ஏற்றப்படுகிறது. சரவணப் பொய்கையில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக மாறி, பின்னர் பார்வதி தேவியால் ஒன்றாக இணைக்கப்பட்டு முருகப்பெருமான் உருவானதான ஐதீகம் இந்நாளோடு தொடர்புடையது. எனவேதான் திருப்பரங்குன்றம் உட்பட்ட முருகப்பெருமானின் ஆலயங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
துலா ஸ்நானம் என்றால் என்ன ? – ஆர்.ஆறுமுகம், ஆற்காடு
ஐப்பசி (துலா மாதம்) மாதத்தில், அதிகாலையில் புனித நதியான காவிரி ஆற்றில் நீராடும் வழிபாட்டு முறை துலா ஸ்நானம் எனப்படும். ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை உள்ளிட்ட அறுபத்தி ஆறு கோடி தீர்த்தங்களும் (புனித நதிகளும்) காவிரியில் வந்து கலந்து புனிதப்படுத்துவதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது (ஸ்ரீரங்கம், மயிலாடுதுறை) கங்கையில் நீராடுவதற்கு இணையான புண்ணியத்தைத் தரும்.
துரை முருகன் வீட்டுத் திருமணத்தில் வேத மந்திரம், கொட்டும் மழையில் திருவெண்காட்டில் பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின், தனது தொகுதியில் தீபாவளி கொண்டாடிய சேகர் பாபு, பகுத்தறிவுக்கு ஆபத்தா? – எஸ். சுந்தர், சூனாம்பேடு
இல்லை. பகுத்தறிவு பேசும் இயக்கங்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே ஆபத்து. நாம் ரசித்துக் கொண்டே கடந்து செல்லலாம்!
நாடக நாடாளுமன்ற கூட்டத்தில் ஹிந்தியில் பேசியிருக்கிறாரே துரை வைகோ ? – எல். முனியம்மா, முண்டியம்பாக்கம்
நாடகக் கட்சிகளின் நாடகம் அரங்கேற்றப்படும் இடம் அது என்பதால்..!
அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறதே ? – -பி. மேகலா, மேல்மலையனூர்
சனாதன ஒழிப்புப் போராளி, முன்னாள் துணை முதல்வர் கைது வரை இது தொடரும் என்றும் சொல்லப்படுகிறது!
கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமாரை, ராகுல் தள்ளி விடுகிறார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பிரியங்காவின் மெய் காவலர் தள்ளிவிடுகிறார். ராகுல் – பிரியங்காவின் அடாவடி பற்றி ? – டி. அசோக், நாகப்பட்டினம்
அடிமைகள் இருக்கும் வரை எஜமானர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! காங்கிரஸ் கட்சிக்குள் கொத்தடிமை மீட்புப் போராட்டம் வரும் என்று நம்புவதற்கு இடம் இல்லை!
ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்திய கப்பல்களுக்கு விலக்கு அளித்துள்ளதே ஈரான் ? – ஹெச். சித்ரா, சித்தன்னவாசல்
பிரதமர் மோடி, வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மீதான சர்வதேச மதிப்பு உயர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே அத்தாட்சி.