கர்நாடகாவின் உடுப்பியில் திட்டமிட்டு துவக்கப்பட்ட ஹிஜாப், புர்கா பிரச்சனையின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உள்ளதை உளவு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. உதாரணமாக, ஹிந்து மாணவர்களிடையே சென்று வேண்டுமென்றே ‘அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிட்ட புர்கா அணிந்த மாணவி முஸ்கன் கான் பெயரில் நூற்றுக் கணக்கான போலி ட்விட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல போலி கணக்குகள், போலி முகவரிகளுடன் பிப்ரவரி 09, 2022 அன்று உருவாக்கப்பட்டன. அந்த மாணவி முஸ்லிம் உலகின் நாயகி, சிங்கம் என திட்டமிட்டே சித்தரிக்கப்பட்டார். தலிபான் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்கள் ஹிஜாப் விவகாரத்தை ஆதரித்தபோது, இந்த போலி கணக்குகள் மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக தீங்கிழைக்கப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மிகச் சரியாக ஹிஜாப் பிரச்சனை துவங்குவதற்கு முன் தினம், அந்த டுவிட்டர் கணக்குகளில் இருந்த பழைய பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த பிரச்சனையை என்று, எங்கு, எப்படி துவக்க வேண்டும் என இங்குள்ள முஸ்லிம் பிரிவினைவாத அமைப்புகளும், ஐ.எஸ்.ஐ’யும் முன்னதாகவே திட்டமிட்டுள்ளன என்பது வெளியாகியுள்ளது.