ஒடிசாவின் சம்பல்பூரில், ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 12 புதன்கிழமை அன்று மாலை சமன்யோய் சமிதி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இருசக்கர வாகனப் பேரணி, தனுபாலி பகுதியில் உள்ள மசூதி அருகே சென்றபோது அவர்கள் மீது முஸ்லிம் மதவாதக் கும்பல், வன்முறைகளை நிகழ்த்தியது. பேரணி வந்தவர்கள் மீது பயங்கர கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்களை தர்காத்துக்கொள்ளவும் தாக்குதலை தடுக்கவும் அங்குவீசப்பட்டு கிடந்த கற்களை எடுத்து வன்முறை கும்பல் மீது வீச ஆரம்பித்தனர். இது இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தியது. இந்த மோதலில் தனுபாலி காவல் நிலையத்தின் பெண் அதிகாரி அனிதா பிரதான் உட்பட பத்து காவலர்கள் காயமடைந்தனர். வெளியாகியுள்ள சம்பவத்தின் காணொளிகள் ஒரு மசூதியில் இருந்தும் அதை ஒட்டிய பாதையின் அருகே இருந்தும் தொடர்ந்து கல் வீசப்படுவது தெரிகிறது. பேரணியில் பயன்படுத்திய வாகனங்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், பேரணிக்கு இடையூறு ஏற்பட்டது. வாகனங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. முஸ்லிம் வன்முறை கும்பலைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்வதையும் அதில் காண முடிந்தது. பேரணியில் வந்தவர்களையும் காவலர்களையும் வன்முறையாளர்கள் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் தெரிந்தது. கல் வீச்சுக்குப் பிறகும் அடங்காத அந்த வன்முறை கும்பல் உள்ளூர் கடைகளுக்கு தீ வைத்தது. வன்முறை படிப்படியாக அப்பகுதியில் பரப்பப்பட்டது. வன்முறையில் பல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறைக்குப் பிறகு 25 பேர் கைது செய்யப்பட்டனர், 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க அங்கு ஆயுதம் தாங்கிய கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டனர். சம்பல்பூர் மாவட்டத்தில் 48 மணி நேரம் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒடியா நாட்காட்டியின்படி, ஹனுமன் ஜன்மோத்சவ் ஏப்ரல் 14 அன்று, சங்கராந்தி நாளில் அனுசரிக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.