உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் “இன்ஸ்பைர் இன் இன்ஸ்பயர்டு ரிசர்ச்” திட்டப் பயனாளிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “சாதிக்கும் ஆற்றல் கொண்ட ஸ்டார்ட் அப்களை அணுகி அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் BIRAC உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும். புதுமையான இளம் உள்ளங்கள் மற்றும் சாத்தியமான ஸ்டார்ட் அப்களுக்காக நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய வாய்ப்பை வழங்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். மேலும், இந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் உரையை பற்றிக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர், அதில் மோடி, “இன்று பாரதத்தின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பெரிய நகரங்களில் மட்டுமில்லாமல் சிறிய நகரங்களில் இருந்தும் தொழில்முனைவோரை உருவாக்கி வருகிறது. பாரதத்தில் புதுமையான யோசனை உள்ளவர் செல்வத்தை உருவாக்க முடியும்” என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.