சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமையை கொண்டவரும், ஆங்கிலேய படைகளை வீழ்த்தியவருமான வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று.
ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தில் பிறந்த வேலுநாச்சியார். இளம் வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்ட போர்க் கலைகளை கற்றுத் தேர்ந்தார். 1746ல் சிவகங்கை இளைய மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து ராணியானார். 1772ல் ஆங்கிலேயர்களால் கணவர் முத்து வடுகநாதர் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அடுத்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சூளுரைத்தார்.
விருப்பாச்சி கோபால்நாயக்கரிடம் அடைக்கலம் அடைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்தார். மருதுசகோதரர்கள் அவருக்கு பக்க பலமாக இருந்தனர். ‘கொரில்லா போர்முறை’ பயன்படுத்தி ஆங்கிலேய படைகளை விரட்டியத்தார். குயிலி சின்ன வயதிலேயே தாயை இழந்ததால் அவரை தாயாய் அரவணைத்தார். சிவகங்கை சீமையை வெற்றிக்கரமாக மீட்ட வேலுநாச்சியார், 1780ல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.